200 ரூபாய்க்குள் ப்ரிட்ஜ் வேண்டுமா? இதை பயன்படுத்தினால் நீங்கள் 100 வயது வரை ஆரோக்கியமாக வாழலாம்!!
கோடை காலம் தொடங்கி சில மாதங்கள் கடந்து இருக்கும் நிலையில் தற்பொழுது கத்தரி வெயில் ஆரம்பமாகி இருக்கிறது.கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் இந்தாண்டு பல மடங்கு வெயிலின் தாக்கம் அதிகரித்து இருக்கிறது.
சுட்டெரிக்கும் வெயிலால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.கோடை சூட்டில் இருந்து தப்பிக்க ஏசி,ஏர் கூலர் உள்ளிட்டவற்றை வாங்கி பயன்படுத்துபவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வண்ணம் உள்ளது.
அதேபோல் உணவு மற்றும் நீரை குளிர்வித்து உட்கொள்ள பெருமபாலானோர் ப்ரிட்ஜை பயன்படுத்தி வருகின்றனர்.ஆனால் ப்ரிட்ஜுக்கு பதில் மண் பானையில் தண்ணீர் ஊற்றி பயன்படுத்தி வந்தால் அவை உடல் ஆயுளை கூட்டும் என்று ஆய்வு சொல்கிறது.
குழாய் பொருந்திய மண்பானை,சாதாரண மண் பானை,மண் ஜக்கு,மண் ப்ரிட்ஜ் என்று தண்ணீர் நிரப்பும் மண் பாத்திரங்கள் பல வகைகள் இருக்கிறது.மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால் மண் பாத்திரங்கள் இன்று வரை மவுசு குறையாமல் விற்பனையாகி வருகிறது.
மண் பாத்திரங்கள் பயன்படுத்துவதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:
1)மண் பாத்திரத்தில் நீர் ஊற்றி அருந்தினால் உடல் குளிர்ச்சியாக இருக்கும்.இதனால் வெயில் கால நோய்கள் ஏற்படாமல் இருக்கும்.
2)மண் பாத்திரத்தில் சமைத்த உணவு எளிதில் கெடாது.மண் பாத்திர உணவு உடலுக்கு தேவையான ஆரோக்கிய நன்மைகளை வழங்கும்.
3)மண் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அருந்தி வந்தால் உடலில் pH தன்மை சீராக இருக்கும்.
4)மண் பாத்திர நீரை தொடர்ந்து அருந்தி வந்தால் வயிறு தொடர்பான பாதிப்புகள் நீங்கும்.