மது பழக்கத்தால் சிறுநீரகம் உள்ளிட்ட உறுப்புகள் கடுமையாக பாதிக்கப்படுகிறது.உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பழக்கம் என்று தெரிந்தும் அதை கைவிட முடியாமல் பலரும் கஷ்டப்படுகின்றனர்.
மது பழக்கத்தில் இருந்து முழுமையாக மீள நினைப்பவர்கள் கீழே தரப்பட்டுள்ள பாட்டி வைத்தியத்தில் ஒன்றை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள்.
தேவைப்படும் பொருட்கள்:
1)பாகற்காய் இலை – இரண்டு
2)பசு மோர் – ஒரு கிளாஸ்
தயாரிக்கும் முறை:
முதலில் இரண்டு பாகற்காய் இலையை தண்ணீர் போட்டு அலசி சுத்தம் செய்து கொள்ளுங்கள்.பிறகு இதை உரலில் போட்டு இடித்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள்.
அதன் பிறகு ஒரு கிளாஸில் பசு மோர் ஊற்றி பாகற்காய் இலை சாறு கலந்து பருகினால் மது பழக்கத்தில் இருந்து மீண்டெழ முடியும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)கேரட் – ஒன்று
2)தேன் – ஒரு தேக்கரண்டி
தயாரிக்கும் முறை:
முதலில் ஒரு கேரட்டை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சர் ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள்.
பிறகு இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி தேன் கலந்து பருகினால் மது பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.
தேவைப்படும் பொருட்கள்:
1)வில்வ இலை பொடி – ஒரு தேக்கரண்டி
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
தயாரிக்கும் முறை:
நாட்டு மருந்து கடையில் வில்வ இலை பவுடர் கிடைக்கும்.இதை வாங்கி ஒரு கிளாஸ் நீரில் கலந்து பருகி வந்தால் குடி பழக்கத்தில் இருந்து மீண்டுவிடலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
1)ஏலக்காய் விதை – கால் தேக்கரண்டி
2)எலுமிச்சை விதை – ஐந்து
தயாரிக்கும் முறை:
இந்த இரண்டு பொருட்களையும் உரலில் போட்டு இடித்து பொடித்துக் கொள்ளுங்கள்.பிறகு ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீரில் இந்த பொடியை கலந்து பருகி வந்தால் மது பழக்கத்திற்கு தீர்வு கிடைக்கும்.இந்த பொடியை குழம்பில் கலந்தும் சாப்பிடலாம்.
தேவைப்படும் பொருட்கள்:
1)உலர் திராட்சை – ஐந்து
2)தண்ணீர் – ஒரு கிளாஸ்
தயாரிக்கும் முறை:
ஒரு கிண்ணத்தில் ஐந்து உலர் திராட்சை போட்டு தண்ணீர் ஊற்றி ஊறவிடுங்கள்.ஒரு நாள் முழுவதும் ஊறியப் பிறகு இந்நீரை வடிகட்டி பருகவும்.இவ்வாறு தொடர்ந்து ஒரு மாதம் செய்தால் மது பழக்கத்திற்கு குட் பாய் சொல்லிவிடலாம்.