தமிழகத்தில் தற்பொழுது இடைவிடமால் மழை பெய்து கொண்டிருக்கிறது.இதனால் சளி,இருமல்,காய்ச்சல் போன்ற பாதிப்புகளால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியத்தை செய்தால் சளி,காய்ச்சல்,இருமல் விரைவில் குணமாகும்.
தீர்வு 01:
*பூண்டு பல்
ஒரு கிளாஸில் வெதுவெதுப்பான நீர் எடுத்துக் கொள்ளவும்.பிறகு இரண்டு பல் பூண்டை தோல் நீக்கிவிட்டு சுத்தம் செய்து வாயில் போட்டு மென்று சாப்பிடவும்.பிறகு வெதுவெதுப்பான நீரை குடிக்கவும்.இப்படி செய்தால் மார்பில் கோர்த்திருக்கும் சளி கரைந்துவிடும்.
தீர்வு 02:
*எலுமிச்சை சாறு
*தேன்
ஒரு கிளாஸ் சூடான நீரில் ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1/2 ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் சளி,இருமல் பிரச்சனை நீங்கும்.
தீர்வு 03:
*பூண்டு
*மிளகு
*இஞ்சி
*உப்பு
*மஞ்சள் தூள்
*சோள மாவு
இரண்டு பல் பூண்டு மற்றும் ஒரு துண்டு இஞ்சை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.பிறகு இரண்டு அல்லது மூன்று கரு மிளகை உரலில் போட்டு தட்டி கொள்ளவும்.பின்னரே 1/4 ஸ்பூன் சோள மாவை கிண்ணத்தில் கொட்டி சிறிது தண்ணீர் ஊற்றி கரைத்துக் கொள்ளவும்.
அதன் பிறகு அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.பிறகு நறுக்கிய பூண்டு,இஞ்சி மற்றும் இடித்த மிளகு சேர்த்து வதக்கவும்.பின்னர் கரைத்த சோள மாவை ஊற்றி மஞ்சள் உப்பு சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் கொதிக்க வைத்து குடித்தால் சளி,காய்ச்சல் குணமாகும்.
தீர்வு 04:
*அரிசி
*மிளகு
*சீரகம்
*உப்பு
அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து 1/4 டம்ளர் அரிசி போட்டு வறுக்கவும்.அரிசி பொரிந்து வந்ததும் அடுப்பை அணைத்து ஆறவிடவும்.
பிறகு இதை மிக்ஸி ஜாரில் கொட்டி 1/4 தேக்கரண்டி சீரகம் மற்றும் ஐந்து கரு மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
பின்னர் அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கப் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.அடுத்து அரைத்த அரசி பொடியை கலந்து குறைவான தீயில் கஞ்சி காய்ச்சவும்.அரசி கலவை நன்கு கொதித்து வந்ததும் சுவைக்காக சிறிது உப்பு சேர்த்து ஒரு கிண்ணத்தில் ஊற்றி குடிக்கவும்.இந்த வறுத்த அரிசி கஞ்சியை குடித்தால் சளி,இருமல்,காய்ச்சல் சில நிமிடங்களில் குணமாகும்.