தோல் நோய்க்கு சிறந்த வீட்டு வைத்தியம்!
தீர்வு 01:-
ஒரு கைப்பிடி அளவு குப்பைமேனி இலையை அரைத்து மஞ்சள் கலந்து தோலில் பூசி குளித்து வந்தால் தோல் தொடர்பான நோய் பாதிப்புகள் ஏற்படாது.
தீர்வு 02:-
ஒரு கப் அளவு வேப்பிலையை அரைத்து உடலில் பூசி குளித்து வர தோல் வியாதிகள் ஏற்படாது.
தீர்வு 03:-
குப்பைமேனி இலையை அரைத்து விழுதாக்கி தினமும் காலை நேரத்தில் 1 உருண்டை என்றவாறு சாப்பிட்டு வர தோல் வியாதி குணமாகும்.
தீர்வு 04:-
பூண்டை அரைத்து தேங்காய் எண்ணெயில் குழைத்து தோல் மீது தடவி வர நல்ல பலன் கிடைக்கும்.
தீர்வு 04:-
சிறிய நங்கை இலை சிறிதளவு எடுத்து காலை, மாலை என இருவேளை சாப்பிட்டு வர தோல் வியாதி குணமாகும்.
தீர்வு 05:-
தேங்காய் எண்ணெயை சூடாக்கி பச்சை கற்பூரத்தை சேர்த்து தோல் மீது தடவி வர தோல் வியாதி குணமாகும்.
தீர்வு 06:-
கற்றாழை ஜெல்லை தோல் மீது பூசி குளித்து வந்தால் தோல் சார்ந்த பிரச்சனை சரியாகும்.
தீர்வு 07:-
குப்பைமேனி இலையை உலர்த்தி பொடியாக்கி குளியல் சோப்பிற்கு பதில் இந்த பொடி உடலில் தேய்த்து குளித்து வந்தால் தோல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படும்.