Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தொண்டை கட்டலுக்கு பெஸ்ட் ஹோம் ரெமிடி!! ஒன் டைம் ட்ரை பண்ணுங்க.. பலனை கண்கூடாக பார்ப்பீங்க!!

சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தொண்டை கட்டல் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர்.தொண்டை சதை வளர்தல்,தொண்டைப் புண்,தொண்டை கரகரப்பு,தொண்டை எரிச்சல்,தொண்டை அலர்ஜி,தொண்டை நீர்க்கட்டி போன்ற காரணங்களால் தொண்டை கட்டல் ஏற்படுகிறது.

அதேபோல் குளிர்ந்த பானங்கள்,ஐஸ்க்ரீம் போன்றவற்றை சாப்பிடும் பொழுது சிலருக்கு தொண்டை கட்டல் ஏற்படுகிறது.இதை சரி செய்யும் அற்புத ஹோம் ரெமிடி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

தேவையான பொருட்கள்:-

1)மாவிலை – இரண்டு
2)மிளகு – பத்து
3)கிராம்பு – இரண்டு
4)தேன் – ஒரு ஸ்பூன்
5)பூண்டு பல் – இரண்டு
6)பசும் பால் – 100 மில்லி

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் தேவையான பொருட்கள் அனைத்தனையும் சொல்லிய அளவுப்படி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 02:

பிறகு மாவிலையை அரைத்து சாறு எடுத்து பிழிந்து கொள்ளுங்கள்.அதன் பின்னர் மிளகு மற்றும் கிராம்பு அதாவது இலவங்கத்தை உரலில் போட்டு கொரகொரப்பாக இடித்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 03:

அடுத்து இரண்டு பூண்டு பற்களை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 04:

அடுத்து அடுப்பில் பாத்திரம் ஒன்றை வைத்து ஒரு கிளாஸ் பசும் பால் ஊற்றிக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 05:

பால் சூடானதும் அரைத்து பிழிந்து வைத்துள்ள மாவிலை சாறை அதில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 06:

அதன் பிறகு உரலில் இடித்த மிளகு மற்றும் கிராம்பை அதில் போட்டு கொதிக்க வையுங்கள்.

ஸ்டெப் 07:

பின்னர் நறுக்கி வைத்துள்ள பூண்டு பற்களை அதில் போட்டு கொதிக்க வைக்க வேண்டும்.

ஸ்டெப் 08:

பிறகு இதை ஒரு கிளாஸிற்கு ஊற்றி தேவையான அளவு தேன் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து பருகினால் தொண்டை கட்டல் குணமாகும்.

தேவையான பொருட்கள்:-

1)மிளகு – நான்கு
2)கிராம்பு – இரண்டு
3)இஞ்சி – ஒரு துண்டு
4)ஏலக்காய் – ஒன்று

செய்முறை விளக்கம்:-

ஸ்டெப் 01:

முதலில் நான்கு மிளகை உரலில் போட்டு இடித்துக் கொள்ளுங்கள்.அதன் பிறகு இரண்டு கிராம்பை போட்டு எடுத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 02:

அடுத்து ஒரு துண்டு இஞ்சியை தோல் நீக்கிவிட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளுங்கள்.

ஸ்டெப் 03:

இப்பொழுது பாத்திரம் ஒன்றில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றி சூடுபடுத்துங்கள்.பிறகு அதில் மிளகு மற்றும் கிராம்பு சேர்த்து கொதிக்க வையுங்கள்.

ஸ்டெப் 04:

பின்னர் அதில் இஞ்சி துண்டுகள் மற்றும் வாசனைக்காக ஏலக்காய் சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி பருகினால் தொண்டை கட்டல் குணமாகும்.

Exit mobile version