முகப் பருக்கள் நீங்க சிறந்த எளிய வழிகள்.. சில நாட்களில் தீர்வு நிச்சயம்!

0
97
#image_title

முகப் பருக்கள் நீங்க சிறந்த எளிய வழிகள்.. சில நாட்களில் தீர்வு நிச்சயம்!

நம்மில் பெரும்பாலானோர் முகப்பரு பாதிப்பால் அவதிப்பட்டு வருகிறோம்.இந்த முகப்பருக்கள் வர தொடங்கி விட்டாலே முகத்தின் அழகு குறைந்து விடுமென்ற அச்சம் அனைவரிடமும் இருக்கும் பொதுவான ஒன்று தான்.இந்த பாதிப்பிற்காக ரசாயனம் கலந்த க்ரீம்களை உபயோகிப்பதால் நாம் பல பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும்.இந்த முகப்பரு பாதிப்புகள் நீங்க இயற்கை வழிகளை கடைபிடிப்பதே சிறந்தது.

முகப் பருக்கள் நீங்க சிறந்த வழிகள்:

*நறுமணம் கொண்ட சந்தனத்தின் தூள் மற்றும் முகத்திற்கு பயன்படுத்தும் பன்னீர் ஆகியவற்றை ஒரு பவுலில் சேர்த்து கலக்கி கொள்ள வேண்டும்.பின்னர் முகத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பின் தயார் செய்து வைத்துள்ள கலவையை முகத்தில் அப்ளை செய்து 15 நிமிடங்கள் வரை வைத்திருந்து நன்கு கழுவ வேண்டும்.தொடர்ந்து இதனை செய்து வந்தோம் என்றால் பருக்கள் மறையும்.

*வேப்பங்கொழுந்தை தண்ணீர் விட்டு அரைத்து அந்த விழுதை முகத்தில் தடவி வருவதன் மூலம் முகப்பரு பாதிப்புகள் நீங்கும்.

*எலுமிச்சை சாறு மற்றும் பன்னீர் சம அளவு கலந்து முகத்தில் தடவி வருவதன் மூலம் முகபருகள் நீங்கும்.

*அதிக எண்ணெய் கொண்ட உணவு,நெய்,வெண்ணெய்,கேக்,ஐஸ்க்ரீம்,சாக்லேட்,பாலாடை மற்றும் கோழி இறைச்சி ஆகியவற்றை உண்ணாமல் இருப்பது மிகவும் நல்லது.

*கீரைகள்,பழங்கள்,நட்ஸ் ஆகியவற்றை அடிக்கடி எடுத்து வருவதால் முகம் பொலிவாக இருப்பதோடு பருக்கள் வராமல் இருக்க உதவும்.

*அடிக்கடி முகத்தை கழுவுதல்,ஒரு நாளைக்கு குறைந்தது 1 மணி நேரம் சூரிய வெளிச்சத்தில் நடப்பது உள்ளிட்டவற்றை செய்வதால் உடலுக்கு பல நன்மைகள் உண்டாகும்.பருக்கள் பாதிப்புகளுக்கு சிறந்த தீர்வாகவும் இது இருக்கும்.