எளிதாக தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் தரவரிசை பட்டியல் வெளியீடு! தமிழகத்திற்கு எந்த இடம்
நாட்டில் எளிதாக தொழில் செய்ய உகந்த மாநிலங்களின் தரவரிசை பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
கடந்த 2020 ஆம் ஆண்டில் மத்திய அரசு அறிமுகம் செய்த வணிகச் சீர்திருத்த செயல் திட்டத்தை செயல்படுத்துவதன் அடிப்படையில் இந்த தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த வகையில் இதில் நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் தரவரிசை பட்டியலிடப்பட்டுள்ளது. இதில் மிகச் சிறந்தவையாக ஏழு மாநிலங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.அந்த மிகச்சிறந்த 7 மாநிலங்களில் ஆந்திரா, குஜராத், தெலுங்கானா, ஹரியானா, கர்நாடகா, பஞ்சாப் மற்றும் தமிழகம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.
இதற்கு அடுத்ததாக ஹிமாச்சல பிரதேசம், மத்தியப் பிரதேசம், மஹாராஷ்டிரா, ஒடிசா, உத்தரகண்ட் மற்றும் உத்தர பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.
இவ்வாறு மாநிலங்களின் தரவரிசை பட்டியலை வெளியிடுவதன் மூலமாக முதலீட்டாளர்களின் நம்பிக்கையை அதிகரிப்பது, வணிகத்திற்கு ஏற்ற சூழலை வளர்ப்பது மற்றும் வணிகத்தை செயல்படுத்துவதில் மாநிலங்களிடையே ஆரோக்கியமான போட்டியை அறிமுகப்படுத்துவது என்பதே முக்கிய நோக்கமாகும்.
மேலும் இவ்வாறு தரவரிசை பட்டியல் வெளிடுவதன் வாயிலாக, வணிகம் செய்வதை எளிதாக்க இயலும் என்பதால், அரசு இந்த பட்டியலை தயார் செய்து வெளியிடுகிறது.