Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெஸ்ட் சுகர் கில்லர் பவுடர்!! சர்க்கரை அளவு எகிறினாலும் இனி கவலைப்பட வேண்டியதில்லை!!

இந்தியாவில் சர்க்கரை நோய் பாதிப்பு நம்பர் ஒன் இடத்தில் உள்ளது.கடந்த 20,30 வருடங்களுக்கு முன்பு வயதானவர்களுக்கு மட்டுமே சர்க்கரை நோய் பாதிப்பு வந்தது.ஆனால் தற்போதைய காலகட்டத்தில் பிறக்கும் குழந்தைக்கே சர்க்கரை நோய் இருப்பது கண்டறியப்பட்டிருக்கிறது.

உலகில் சர்க்கரை நோயின் தாயகமாக திகழும் இந்தியாவில் மருந்து மாத்திரை வைத்து கட்டுப்படுத்தும் நிலையில் மக்கள் உள்ளனர்.ஒருமுறை சர்க்கரை பாதிப்பு உறுதியாகிவிட்டால் சாகும் வரை அதை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டியது முக்கியமாக ஒன்றாகும்.

இந்த சர்க்கரை அளவு கட்டுப்படுத்த நம் பாரம்பரிய வைத்திய முறைகளை தொடர்ந்து பின்பற்றலாம்.அதன்படி சர்க்கரை நோயாளிகள் முருங்கை கீரை,சிறுகுறிஞ்சான் மூலிகையை பயன்படுத்தலாம்.

சிறுகுறிஞ்சான் மூலிகை பொடி நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.இதை ஒரு கிளாஸ் வெது வெதுப்பான தண்ணீரில் கலந்து பருகி வந்தால் இரத்த சர்க்கரை அளவு கட்டுக்குள் இருக்கும்.

மற்றொரு தீர்வு:

தேவையான பொருட்கள்:-

1)தண்ணீர் – ஒரு கிளாஸ்
2)முருங்கை கீரை – ஒரு கப்
3)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
4)சீரகம் – அரை தேக்கரண்டி

செய்முறை விளக்கம்:-

1.முதலில் ஒரு கைப்பிடி முருங்கை இலையை பறித்து பாத்திரம் ஒன்றில் போட்டு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

2.பிறகு அடுப்பில் வாணலி வைத்து அரை தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுத்துக் கொள்ள வேண்டும்.

3.பின்னர் ஒரு சிறிய அளவு எலுமிச்சம் பழத்தை இரண்டாக நறுக்கி அதில் இருந்து சாறு எடுத்துக் கொள்ள வேண்டும்.

4.அடுத்து மிக்சர் ஜாரில் இந்த முருங்கை கீரையை போட்டு ஒரு கப் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

5.பின்னர் வறுத்த சீரகத்தை போட்டு ஜூஸ் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.இந்த முருங்கை ஜூஸை ஒரு கிண்ணத்திற்கு வடிகட்டி கொள்ள வேண்டும்.

6.பிறகு எலுமிச்சை சாறை அதில் பிழிந்து நன்கு கலக்கி பருகி வந்தால் சர்க்கரை நோய் பாதிப்பு குணமாகும்.

7.உயர் இரத்த அழுத்தம்,சுவாசம் சம்மந்தப்பட்ட பாதிப்புகளால் அவதியடைந்து வருபவர்கள் இந்த முருங்கை கீரை சாறு பருகி வரலாம்.உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்புகள் குறைய முருங்கை கீரை ஜூஸ் பருகி வரலாம்.

8.மூட்டு வலி,மூட்டு அலர்ஜி குணமாக முருங்கை கீரையை அரைத்து ஜூஸாக பருகி வரலாம்.உடலில் இரும்புச்சத்து குறைபாட்டை அனுபவித்து வருபவர்கள் முருங்கை கீரை சாறை பருகி வரலாம்.

9.தினமும் ஒரு கிளாஸ் முருங்கை கீரை சாறு பருகி வந்தால் இரத்த சோகை நோய் குணமாகும்.

Exit mobile version