நீண்ட காலமாக நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை நிமிடத்தில் கரைத்து தள்ளும் வெற்றிலை!!
நுரையீரலில் அடைத்துக் கொண்டிருக்கும் சளியை முழுமையாக அகற்ற இந்த மூலிகை வைத்தியங்கள் உதவும்.மருந்து மாத்திரைக்கு பதில் இவற்றை பயன்படுத்தி வந்தால் நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும்.
*வெற்றிலை – ஒன்று
*தேன் – ஒரு தேக்கரண்டி
*இஞ்சி – ஒரு துண்டு
உரலில் ஒரு வெற்றிலை மற்றும் ஒரு துண்டு தோல் நீக்கப்பட்ட இஞ்சி சேர்த்து இடித்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பிறகு கால் கிளாஸ் தண்ணீரை அதில் ஊற்றி கலக்கி வடிகட்டி கொள்ள வேண்டும்.பின்னர் ஒரு தேக்கரண்டி தூயத் தேனை அதில் சேர்த்து கலக்கி குடித்தால் நுரையீரலில் தேங்கி கிடந்த சளி முழுமையாக வெளியேறி விடும்.
*மிளகு – பத்து
*சீரகம் – ஒரு தேக்கரண்டி
*கற்பூரவள்ளி இலை – நான்கு
ஒரு பாத்திரத்தில் பத்து மிளகு மற்றும் ஒரு தேக்கரண்டி சீரகம் சேர்த்து லேசாக வறுத்து எடுக்க வேண்டும்.பிறகு அதில் ஒரு கிளாஸ் தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.
அதன் பிறகு நான்கு கற்பூரவள்ளி இலையை சேர்த்து கொதிக்கவிட்டு வடிகட்டி குடித்து வந்தால் நுரையீரலில் தேங்கிய சளி முழுமையாக கரைந்து வெளியேறும்.
*சின்ன வெங்காயம் – இரண்டு
*பூண்டு – இரண்டு
*தேன் – ஒரு தேக்கரண்டி
இரண்டு சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ள வேண்டும்.அதன் பின்னர் இரண்டு பல் பூண்டை தோல் நீக்கி பொடியாக நறுக்கி வைக்க வேண்டும்.
அடுத்து ஒரு கிளாஸ் தண்ணீரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி நறுக்கிய சின்ன வெங்காயத் துண்டுகள் மற்றும் பூண்டு பற்களை போட்டு கொதிக்க விட்டு அடுப்பை அணைக்கவும்.
இதை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி சிறிது தேன் சேர்த்து பருகி வந்தால் நுரையீரலில் தேங்கிய சளி கரைந்து மலம் வ வழியாக வெளியேறிவிடும்.