எச்சரிக்கையுடன் இருங்கள் கொரோனாவிடம் இருந்து மட்டுமல்ல திருடர்களிடமும் தான் : அரசு அறிவுறுத்தல்!

0
135

உலகம் முழுவதும் பரவி அனைவரையும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தற்போது தமிழ்நாட்டிலும் பரவி வருகிறது. இதனை தடுக்க தமிழக அரசு சுகாதார துறையுடன் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.

இதனால் பொது மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகம், திரையரங்கம், பள்ளிக்கூடம் போன்ற இடங்களை மூட அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.மேலும் பொது மக்கள் தேவை இன்றி வெளியில் வரவேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனையடுத்து பாரத பிரதமர் மோடி 22 மார்ச் ஞாயிறு அன்று மக்கள் ஊரடங்கிற்கு அழைப்பு விடுத்துள்ளார். அதன்படி நாளை காலை 7 மணி முதல் இரவு ௯ மணி வரை வீடுகளை விட்டு வெளியில் வரவேண்டாம் என்று கேட்டுக்கொண்டுள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி அரசு அதிகாரிகள் போல நடித்து திருடர்கள் சிலர் கைவரிசை காட்டி வருகின்றனர்.

இதன் நிலையில் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
அரசாங்கத்தில் இருந்து வீடுகளில் மருந்து தெளிக்க எந்த குழுக்களும் ஒதுக்கப்படவில்லை, தயவுசெய்து கவனமாக இருங்கள். வைரஸிலிருந்து பாதுகாக்கவோ, வீடுகளுக்கு மருந்து தெளிக்கவோ, வீடுகளை ஆய்வு செய்யவோ எந்தவொரு தரப்பினருக்கும் பொறுப்பேற்பதாகக் கூறும் எந்தவொரு நபருக்கோ அல்லது குழுவிற்கோ கதவைத் திறக்க வேண்டாம்.

தயவுசெய்து அனைத்து குடும்பத்தினருக்கும் நண்பர்களுக்கும் எச்சரிக்கை விடுங்கள், இந்த முறையால் மோசடி பேர்விழிகள் பல வீடுகளில் திருடிவிட்டனர், அப்படி யாராவது வந்தால் உடனடியாக உங்கள் உள்ளூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கவும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.