நமது உடலின் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தையும் நிர்ணயிப்பது ஆரோக்கிய உணவுகள் தான்.நோய் பாதிப்பில் இருந்து நம்மை காக்கும் ஆரோக்கிய உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ண வேண்டும்.நீண்ட காலம் வாழவேண்டுமென்ற ஆசை அனைவருக்கும் இருக்கிறது.இதற்கு ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பங்கு இன்றியமையாதது.
இருப்பினும் அழகு இருக்கும் இடத்தில் ஆபத்து இருக்கும் என்பது போல் ஆரோக்கிய உணவுகளின் அளவு மீறினால் அவை நஞ்சாகிவிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.சிலர் வாழ்நாள் முழுவதும் ஆரோக்கியம் நிறைந்த உணவுகளை மட்டுமே எடுத்துக் கொள்கின்றனர்.இது நல்ல விஷயம் தான் இருப்பினும் ஆரோக்கியம் என்ற பெயரில் சத்து நிறைந்த உணவை அதிகமாக எடுத்துக் கொண்டால் அவை உடல் நலத்திற்கு பாதகமாக மாறிவிடும்.அந்தவகையில் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும் ஆரோக்கிய உணவுகள் என்ன என்பது குறித்து இங்கு விலக்கப்பட உள்ளது.
1)நெய்
இனிப்பு உணவுகள் நெய் இல்லாமல் செய்ய முடியாது.உணவின் ருசியை கூட்டும் நெய் பாலில் இருந்து கிடைக்க கூடிய ஒரு பொருளாகும்.நெய்யில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நெயில் கிடைக்கும் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.இருப்பினும் நெய்யை அதிகமாக உட்கொண்டால் அது உடல் பருமன்,மாரடைப்பு போன்ற பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.
2)பாதாம் பருப்பு
உலர் விதைகளில் அதிகம் பயன்படுத்தப்படும் பாதாம் பருப்பில் வைட்டமின்,மெக்னீசியம்,பொட்டாசியம்,நல்ல கொழுப்பு நிறைந்துள்ளன.பாதாம் பருப்பை ஊறவைத்து சாப்பிட்டு வந்தால் ஏகப்பட்ட நன்மைகள் கிடைக்கும்.இருப்பினும் அளவிற்கு அதிகமாக பாதாம் பருப்பு உட்கொண்டால் அவை உடல் எடையை கூட்டிவிடும்.
3)டார்க் சாக்லேட்
சுவை மிகுந்த டார்க் சாக்லேட் மாதவிடாய் பிரச்சனை,ஆண்மை பிரச்சனைக்கு தீர்வாக இருக்கிறது.இது ஆரோக்கிய உணவுப் பொருள் என்றாலும் அதிகமாக சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை.தூக்கமின்மை,சர்க்கரை போன்ற பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.
4)பூண்டு
நம் சமையலில் பயன்படுத்தும் மருத்துவ குணம் நிறைந்த பூண்டு இதயப் பிரச்சனையை சரி செய்கிறது.கெட்ட கொழுப்பை கரைக்கும் தன்மை கொண்ட பூண்டை அதிகமாக எடுத்துக் கொண்டால் நெஞ்செரிச்சல்,வைற்றுப் போக்கு,கல்லீரல் தொடர்பான பாதிப்புகள் ஏற்படும்.
5)தண்ணீர்
இதில் என்ன ஆரோக்கியப் பிரச்சனை இருக்கிறது என்று நீங்கள் கருதலாம்.உடலுக்கு தேவையான தண்ணீர் பருக வேண்டியது முக்கியம்.இருப்பினும் இதை அளவிற்கு அதிகமாக பருகினால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும்.வாந்தி,குமட்டல்,தலைசுற்றல் போன்ற பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும்.