பக்கவாதம்: தற்போதைய காலகட்டத்தில் நிற்க நேரமின்றி வேலை,பணம் என்று இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கின்றோம்.வேலைப்பளு,மன அழுத்தம் மற்றும் தற்பொழுது பின்பற்றி வரும் ஆரோக்கியம் இல்லாத உணவுப் பழக்க வழக்கங்களால் உடல் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கிறது.
இதில் பக்கவாதம் என்பது தற்பொழுது இளைய தலைமுறையினர் மத்தியில் அதிகரித்து வருகிறது.முன்பெல்லாம் முதுமை நோய் என்று சொல்லப்பட்டு வந்த பக்கவாதம் தற்பொழுது இளம் வயதினரையும் தாக்கி வருவதால் மக்கள் மத்தியில் ஒருவித அச்ச உணர்வு ஏற்படத் தொடங்கியிருக்கிறது.
பக்கவாதத்தை முன்கூட்டியே கண்டறிய முடியாது.ஆனால் சில அறிகுறிகளை கொண்டு தெரிந்து கொள்ளலாம்.பக்கவாதம் வந்தால் முதலில் கை,கால் உள்ளிட்டவை ஒருபக்கமாக இழுத்துக் கொள்ளும்.அடுத்து வாய் மற்றும் கண்கள் கடுமையாக பாதிக்கப்படும்.
பக்கவாத அறிகுறிகள்:
**பார்வை இழப்பு
**கடுமையான தலைவலி
**பேச்சில் தடுமாற்றம்
**கை மற்றும் கால் பலவீனம்
**உடல் முடக்கம்
பக்கவாதம் வருவதற்கான காரணங்கள்:
பெருமூளைக்கு செல்லும் இரத்த ஓட்டத்தில் தடை ஏற்பட்டாலோ அல்லது பெருமூளையில் இரத்தக்கசிவு ஏற்பட்டாலோ பக்கவாதம் வரும்.
மூளைக்கு இரத்தம் வழங்கும் குழாயில் அடைப்பு ஏற்பட்டால் இரத்த ஓட்டம் தடைபடும்.இதனால் பக்கவாதம் ஏற்படும்.
பக்கவாதம் யாருக்கு வர வாய்ப்பிருக்கிறது?
1)உயர் இரத்த அழுத்தம் அதாவது பிபி பிரச்சனை இருப்பவர்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பிருக்கிறது.
2)சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு பக்கவாதற்கான அபாயம் அதிகமாகவே உள்ளது.
3)இதயம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பக்கவாதம் வர வாய்ப்பிருக்கிறது.
4)நரம்பு சம்மந்தபட்ட பிரச்சனைகளை அனுபவித்து வருபவர்களுக்கு பக்கவாதம் எட்டி பார்க்க அதிக வாய்ப்பிருக்கிறது.
பக்கவாதம் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?
*மது மற்றும் புகைப்பழக்கத்தை கைவிட வேண்டும்.
*உடலில் இரத்த சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.
*உயர் இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த வேண்டும்.தினமும் உடற்பயிற்சி,யோகா,தியானம் போன்றவற்றை செய்ய வேண்டும்.