பஞ்சாப் மாநில முதலமைச்சராக இன்று பதவி ஏற்கிறார் பகவந்த் மான்!

0
128

சமீபத்தில் உத்தரப்பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், மணிப்பூர், உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இந்த 5 மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. அந்த தோல்விக்கு பொறுப்பேற்று அந்தந்த மாநில கட்சித் தலைவர்கள் தங்களுடைய பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மேலிடம் கேட்டுக் கொண்டது.

அதேநேரம் தற்சமயம் இந்தியாவில் பலமிக்க கட்சியாக இருக்கக்கூடிய பாஜக பஞ்சாப் மாநிலத்தை தவிர்த்து மற்ற நான்கு மாநிலங்களிலும் ஆட்சியை கைப்பற்றியது. ஆனாலும் பஞ்சாப் மாநிலத்தில் ஏற்பட்ட தோல்வி அந்தக் கட்சியை அதிர்ச்சியடைய வைத்தது.

ஏனென்றால் பஞ்சாப் மாநிலத்தில் பலமான கட்சியாக இருக்கிறது என்று நினைத்திருந்த காங்கிரஸ் கட்சியும் கூட ஆட்சியைக் கைபற்றவில்லை மாறாக ஆம் ஆத்மி அந்த மாநிலத்தில் ஆட்சியை கைப்பற்றியிருக்கிறது.

பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தமுள்ள 117 தொகுதிகளில் ஆம் ஆத்மி 92 தொகுதிகளை கைப்பற்றி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்திருக்கிறது.

இந்திய அரசியல் வரலாற்றில் ஒரு மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்திய மாநில கட்சி ஒன்று இன்னொரு மாநிலத்தில் வெற்றிக்கொடியை நாட்டியிருப்பது இதுவே முதல் முறை என்று சொல்லப்படுகிறது.

அப்படிப்பட்ட ஒரு வரலாற்றுச் சாதனையை அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி கட்சி நிகழ்த்திக் காட்டியுள்ளது. பஞ்சாப் மாநிலத்தின் முதலமைச்சர் வேட்பாளராக பகவந்த் மான் போட்டியிட்டார்.

இந்த சூழ்நிலையில், பஞ்சாப் மாநிலத்தின் புதிய முதலமைச்சராக பகவந்த் மான் இன்று பொறுப்பேற்கவிருக்கிறார் பகத்சிங் பிறந்த ஊரான கட்கர் கலன் பகுதியல் பதவியேற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.

இந்த விழாவில் டெல்லி முதலமைச்சரும், ஆம் ஆத்மி கட்சியின் தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்டோர் பங்கேற்றுக்கொள்கிறார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.