சினத்திரை சீரியலில் களமிறங்கிய மூத்த நடிகர் பாக்யராஜ்!

0
214

சினத்திரை சீரியலில் களமிறங்கிய மூத்த நடிகர் பாக்யராஜ்!

நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ் தற்போது ஜி தமிழில் ஒளிபரப்பாகும் புதிய சீரியல் ஒன்றில் நடித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு மேல் பல வெள்ளி விழா படங்களைக் கொடுத்தவர் இயக்குனர் மற்றும் நடிகர் பாக்யராஜ். அவரின் ‘இன்று போய் நாளை வா’ தாவனிக்கனவுகள், முந்தானை முடிச்சு போன்ற படங்கள் இன்றளவும் கொண்டாடப்படும் படங்களாக உள்ளன.

ஆனால் 90 களுக்குப் பிறகு அவரின் படங்கள் ரசிகர்கள் மத்தியில் கவர்ச்சியை இழந்தன. இதனால் அவர் இயக்கிய படங்கள் தோல்வியை தழுவின. ஒரு கட்டத்தில் இயக்கத்தை மூட்டைக் கட்டி வைத்துவிட்டு நடிப்பில் மட்டும் கவனம் செலுத்தி குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார். பல படங்களில் அவரின் வேடங்கள் கவனிப்பை பெற்றன.

அதுபோல பல சினிமா விமர்சன நிகழ்ச்சிகளையும் செய்து வந்தார். இந்நிலையில் தற்போது ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் வித்யா நம்பர் 1 எனும் தொலைக்காட்சி தொடரில் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்துள்ளார். சீரியலின் முக்கியமானக் கட்டத்தில் நடக்கும் ஒரு நீதிமன்ற விசாரணைக் காட்சிகளில் நீதிபதியாக பாக்யராஜ் நடித்துள்ளார். இந்த எபிசோட்கள் தற்போது ஒளிபரப்பாகி வருகின்றன.  பாக்யராஜ் நடிக்கும் எபிசோட்களைப் பார்க்க ரசிகர்கள் மத்தியில் ஆர்வம் அதிகமாக உள்ளது. இதற்கு முன்னர் பாக்யராஜ் சித்தி 2 சீரியலில் ராதிகாவுடன் இதுபோல சிறப்பு வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.