Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தமிழில் சூர்யா படத்தை காப்பியடித்த பாகுபலி.!!இணையத்தில் வைரலாகும் வீடியோ.!!

கடந்த 2015ஆம் ஆண்டு எஸ்.எஸ் ராஜமவுலி இயக்கத்தில் பிரம்மாண்டமாக வெளியான திரைப்படம் தான் பாகுபலி. அதனைத் தொடர்ந்து 2017 ஆம் ஆண்டு இந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகி பிரம்மாண்ட வெற்றி பெற்றது.

இந்தப்படத்தில் ஹீரோவாக பிரபாஸ் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் ராணா டகுபதி, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், அனுஷ்கா ஷெட்டி தமன்னா, நாசர் என திரை பிரபலங்கள் பலரும் நடித்திருந்தனர்.

இந்நிலையில், பாகுபலி இரண்டாம் பாகத்தில் இடம்பெற்றிருந்த சண்டைக்காட்சியை வேறு ஒரு படத்தை பார்த்து காப்பி அடித்ததா என்று கேள்வி எழுப்பும் வகையில் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

அந்த வீடியோ நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ஏழாம் அறிவு திரைப்படத்தில் போதிதர்மராக மேற்கொண்ட சண்டைக்காட்சியை போன்று பாகுபலி சண்டைக் காட்சியும் உள்ளதால் இந்த காட்சி காப்பி அடித்து எடுக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பலரும் கூறி வருகின்றனர். தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

Exit mobile version