Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

தென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!!

#image_title

தென்காசி டூ காசி செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில்!!! நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது!!!

தென்காசியில் இருந்து காசிக்கு செல்லும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் தென்காசியில் இருந்து நவம்பர் 9ம் தேதி புறப்படுகின்றது என்று தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து காசிக்கு சுற்றுலா செல்ல விரும்பும் நபர்கள் முன்பதிவு செய்து கொள்ளலாம் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.

இது குறித்து ஐ.ஆர்.சி.டி.சி தென்மண்டல பொது மேலாளர் ராஜலிங்கம் பாசு அவர்கள் “இந்திய ரயில்வேயின் ஐ.ஆர்.சி.டி.சி நிர்வாகம் பயணிகள் சுற்றுலா செல்வதற்கு என்று பிரத்யேகமாக பாரத் கவுரவ் என்ற சுற்றுலா ரயிலை அறிமுகப்படுத்தி இருக்கின்றது.

காசி சுற்றுலாவானது தீபாவளி கங்கா ஸ்நானம் சிறப்பு யாத்திரை என்ற பெயரில் தென்காசியில் இருந்து நவம்பர் மாதம் 9ம் தேதி தொடங்குகிறது. தீபாவளி நாள் அன்று காசியில் கங்கை ஆற்றில் புனித நீராடுதலுடன் தொடங்கும் இந்த சுற்றுலா யாத்திரை ராமேஸ்வரத்தில் இராமநாதசுவாமி தரிசனத்தோடு முடிவடையவுள்ளது.

இந்த பாரத் கவுரவ் சுற்றுலா ரயிலில் 3 குளிர்சாதனப் பெட்டிகளும், 8 படுக்கை வசதி பெட்டிகளும், ஒரு பேட்டரி கார் வசதி கொண்ட பெட்டியும், இரண்டு பவர் கார்கள் கொண்ட பெட்டிகளும் உள்ளது.

நவம்பர் மாதம் 9ம் தேதி தென்காசியில் புறப்படும் பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், மதுரை, திருச்சி, தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சென்னை வழியாக சென்று நவம்பர் 11ம் தேதி காசியை அடையும். அதன் பின்னர் நவம்பர் 13ம் தேதி காசியில் புறப்பட்டு கயா வழியாக ராஞ்சி, விஜயவாடா, சென்னை எக்மோர், திருச்சி, காரைக்குடி வழியாக நவம்பர் 16ம் தேதி ராமேஸ்வரம் வந்து சேரும். ராமேஸ்வரத்தில் இருந்து நவம்பர் 17ம் தேதி புறப்பட்டு மதுரை, விருதுநகர் வழியாக தென்காசி வந்து சேரும்.

பாரத் கவுரவ் சுற்றுலா ரயில் மூலமாக காசி செல்வதற்கு படுக்கை வசதிக்கு 16850 ரூபாய் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. மூன்றடுக்கு ஏசி வகுப்புக்கு 30500 ரூபாய் கட்டணமாக வசூல் செய்யப்படுகின்றது.

சுற்றுலா செல்லும்பொழுது சுற்றுலா தளங்களை பார்வையிட பேருந்து வசதி, தென்னிந்திய சைவ உணவுகள், தனியார் பாதுகாவலர், சுற்றுலா மேலாளர், பயணக் காப்புறுதி, ஏசி மற்றும் ஏசி வசதி இல்லாத தங்கும் அறைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்து தரப்படும்.

மேலும் மத்திய மாநில அரசு பேருந்துகளை ஊழியர்கள் பயணம் செய்வதாக இருந்தால் அவர்களுக்கு எல்.டி.சி சான்றிதழ் வழங்கப்படும். தற்பொழுது வரை 600 இருக்கைகளில் 300 இருக்கைகளுக்கும் மேல் முன்பதிவு ஆகி உள்ளது. எனவே காசிக்கு செல்ல வேண்டும் என்று விரும்பும் பயணிகள் அனைவரும் விரைந்து இந்த சேவை பயன்படுத்திக் கொள்ளலாம்” என்று அவர் கூறியுள்ளார்.

Exit mobile version