Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பாரதிகண்ணம்மா சீரியல் செட்டில் பிறந்தநாள் கொண்டாடிய ஹேமா.!! வைரலாகும் புகைப்படங்கள்.!!

பாரதிகண்ணம்மா சீரியல் நடிக்கும் லிசா பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மேலும், தொடர்ந்து இந்த சீரியல் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில், தற்போது பல்வேறு திருப்பங்களுடன் பாரதிகண்ணம்மா சீரியல் மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. தனக்குப் பிறந்த மற்றொரு குழந்தை தான் ஹேமா என்ற விஷயம் கண்ணம்மாவுக்கு தெரியவந்துள்ளது. இதையடுத்து, இந்த உண்மை பாரதிக்கு எப்போது தெரியும் என்று தெரியவில்லை.

இந்நிலையில், இந்த சீரியலில் ஹேமா கேரக்டரில் நடிக்கும் லிசா பாரதிகண்ணம்மா சீரியல் செட்டில் தனது பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடியுள்ளார். தற்போதைய இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Exit mobile version