பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!..

0
213
Bharathiraja will get well soon!..Come back my friend with eye strain!!Vairamuthu Urukkam!..

பாரதிராஜா விரைவில் நலம் பெறுவார்!..கண் கலங்கி மீண்டும் வா என் நண்பா!!வைரமுத்து உருக்கம்!..

இயக்குனரும் நடிகருமான பாரதிராஜா தற்போது நடிப்பில் கவனம் செலுத்தி வரும் நிலையில் தனது படத்திற்கான வேலைகளில் மும்மரமாக ஈடுபட்டு வருகிறார்.இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் பாரதிராஜாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது என்பது வருத்தமளிக்கும் செய்தி.பாரதி ராஜாவின் சொந்த ஊர் தேனி மாவட்டம் ஓய்வு நாட்களில் சொந்த ஊருக்கு செல்வது வழக்கம்.

அதே போல் சென்னையில் இருந்து மதுரைக்கு விமான மூலம் சொந்த ஊருக்கு வந்தார்.ஆனால் 79வயதான நிபுணரான நடிகர் விமான நிலையத்தில் திடிரென்று மயங்கி விழுந்தார்.பின்னர் அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் அவரை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் சில நாட்களுக்கு பாரதிராஜா மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்கள்.

இதை அறிந்த திரைவுலகினர் பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது,மருத்துவமனையில் பாரதிராஜாவைப் பார்த்தேன்.உடல் நலிந்த நிலையிலும் அவரது நக்கல் நகைச்சுவை தீரவில்லை.

சின்ன சின்ன பின்னடைவுகளைச் சீர்செய்ய மருத்துவர்கள் அவரை சூழ்ந்து நின்றிருந்தனர்.அல்லி நகரத்தை டில்லி நகரத்திற்கு அழைத்துச் சென்ற மகா கலைஞன் விரைவில் மீண்டு வருவார் ,கலையுலகை ஆண்டு வருவார்.என்று இவ்வாறு அதில் கூறியிருந்தார்.விரைவில் அவர் குணமடைய அவரது ரசிகர்கள் கடவுளை பிராத்தனை செய்து வருகின்றனர்.