Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்!

ஆடை சர்ச்சையில் சிக்கிய நடிகை பாவனா… அவரே கொடுத்த விளக்கம்!

சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பாவனா அணிந்திருந்த ஆடை குறித்த சர்ச்சைகள் எழுந்துள்ளன.

துபாய் அரசின் பெற்ற நடிகை பாவனா, அதை பெறுவதற்காக வந்த போது அணிந்திருந்த ஆடையால் சர்ச்சை ஒன்று உருவாகியுள்ளது. இந்நிலையில் அதற்கு விளக்கமளித்து  இன்ஸ்டாகிராம் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.

பாவனா தனது தளர்வான வெள்ளை நிற மேலாடையை (போன்சோ) அணிந்து உற்சாகமாக நடனமாடியிருந்தார். ஆனால் அந்த வீடியோ வெளிவந்த உடனேயே, அதற்குக் கீழே பல கருத்துக்கள் தோன்றத் தொடங்கின, அதில் அவருடைய ஆடைக் குறித்த ஆபாசமான மற்றும் மோசமான கமெண்ட்கள் பதிவு செய்யப்பட்டு பகிரப்பட்டன. அதில் மேலாடைக்குள் அவர் வேறு எந்த உடைகளும் அணியாமல் இருந்ததாக பலரும் விமர்சித்து வந்தனர்.

இதுகுறித்த பாவனாவின் பதிவில் “எல்லாமே சரியாகிவிடும் என்று ஒவ்வொரு நாளும் என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு, என் அன்பானவர்களுக்காக என் துக்கங்களை ஒதுக்கி வைக்க முயற்சித்தாலும், நான் செய்யும் அனைத்திற்கும் என்னை அவமானப்படுத்தி என்னை மீண்டும் இருளுக்கு அனுப்ப முயற்சிப்பவர்கள் ஏராளம். அவர்களின் வார்த்தைகளால் என்னை காயப்படுத்தி, அவர்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை அடைகிறார்கள் என்று எனக்குத் தெரியும். அப்படித்தான் உங்கள் மகிழ்ச்சியை நீங்கள் பெறுகிறீர்கள் என்றால், நான் அதை நிறுத்தமாட்டேன். நான் அந்த நிகழ்ச்சியில் என் உடல் நிறத்திலான உடையை அணிந்திருந்தேன்.” என்று கூறியுள்ளார். இதையடுத்து பாவனாவுக்கு சமூகவலதளங்களில் தற்போது ஆதரவு குவிந்து வருகிறது.

Exit mobile version