Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இருசக்கர வாகன ஓட்டிகளே எச்சரிக்கை! இந்த தினத்தில் இதை செய்தால் கடும் நடவடிக்கை!

இருசக்கர வாகன ஓட்டிகளே எச்சரிக்கை! இந்த தினத்தில் இதை செய்தால் கடும் நடவடிக்கை!

வருகின்ற ஞாயிற்றுக்கிழமை ஆங்கில புத்தாண்டு கொண்டாடவிற்கும் நிலையில்,சென்னை மாநகராட்சி பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அதாவது ஆங்கில புத்தாண்டு அன்று சாலை விதி மீறல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று சென்னை மாநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மது அருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுபவர்கள் மீதும், பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்கள் மீதும்கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.பைக் ரேஸில் ஈடுபடும் இளைஞர்களின் வாகனம் பறிமுதல் செய்யப்படும் என்று காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.மேலும் 18 வயதிற்கு உட்பட்ட இளைஞர்கள் வாகனங்கள் ஓட்டி பிடிக்கப்பட்டால் பெற்றோர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் ஆங்கில புத்தாண்டை ஒட்டி கேளிக்கை கொண்டாட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ள நட்சத்திர விடுதிகளின்,ஆலோசனைக் கூட்டம் வருகின்ற டிசம்பர் 29ஆம் தேதி நடத்தப்பட இருப்பதாகவும் அக்கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை உள்ளிட்ட பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை குறித்து ஆலோசனை செய்யப்பட இருப்பதாகவும் ஆணையர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version