Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

இந்த அமைப்பில் இருந்து ரஷ்யா உடனடியாக வெளியேற வேண்டும்! அமெரிக்க அதிபர் ஜோ பைடன்!

அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக பொருளாதார செல்வாக்கு மிக்க ஒரு நாடாக விளங்கி வருவது ரஷ்யா. அப்படி பொருளாதாரம் மற்றும் ஏற்றுமதியில் செல்வாக்கு மிக்க நாடாக விளங்கி வரும் ரஷ்யா சமீபகாலமாக உக்ரைன் மீது கடுமையான போர் தொடுத்து வருகிறது.

இந்தப் போரை கட்டுப்படுத்துவதற்காக உலக நாடுகள் அனைத்தும் பலவிதமாக முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் உலக நாட்டு தலைவர்கள் எவ்வளவு ஆலோசனை கூறினாலும் எதையும் கேட்பதாகயில்லை.

அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் ரஷ்யாவின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்திருக்கின்றன.இந்த சூழ்நிலையில், பெல்ஜியம் தலைநகர் பிரஸ்ஸல்ஸில் நேச நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது இந்த மாநாட்டில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பங்கேற்று கொண்டார்.

அப்போது அந்த மாநாட்டில் உரையாற்றிய அவர் உக்ரைன் படையெடுப்பு குறித்து மாஸ்கோ மீது அழுத்தத்தை அதிகரிக்கும் விதத்தில் ரஷ்ய உயரடுக்குகள் சட்டம் இயற்றுபவர்கள் மற்றும் பாதுகாப்பு நிறுவனங்கள் மீதான பொருளாதாரத் தடைகளை புதிய தொகுப்பை அறிவித்திருக்கிறார்.

இந்த மாநாட்டிற்குப் பிறகு பேசிய அமெரிக்க அதிபர் ஜோ பைடன் உக்ரைன் மீதான போரில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின் ரசாயன ஆயுதத்தைப் பயன்படுத்தினால் அதற்கு நேசநாடுகள் தக்க பதிலடி கொடுக்கும் என்றும் எச்சரிக்கை செய்தார்.இந்த சூழ்நிலையில், ஜி-20 அமைப்பிலிருந்து ரஷ்யாவை வெளியேற்ற வேண்டும் என்று அமெரிக்க அதிபர் வலியுத்தியிருக்கிறார்.

இதுகுறித்து ஜோ பைடன் உரையாற்றும்போது ஜி-20 அமைப்பிலிருந்து ரஷ்யா வெளியேறவேண்டும் இந்தோனேசியா மற்றும் மற்ற நாடுகள் ரஷ்யாவை அகற்றுவதில் உடன்படவில்லை என்றால் உக்ரைனை கூட்டங்களில் பங்கேற்க அனுமதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

ஜி7 கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்கள் உக்ரைன் மீது போர் தொடுத்துள்ள ரஷ்யாவின் மத்திய வங்கி பரிமாற்றங்களில் தங்கத்தை பயன்படுத்துவதை கட்டுப்படுத்துவதாக அறிவித்திருக்கிறார்கள்.

Exit mobile version