TVK: விஜய் விக்கிரவாண்டியில் நடத்தும் மாநாட்டில் அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் நிர்வாகிகள் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தமிழக வெற்றிக்கழகத்தின் மாநாடானது வரும் 23ஆம் தேதி விக்ரவாண்டியில் நடைபெற உள்ளது. இதில் 50,000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. காவல்துறைவிஜய் நடத்தும் மாநாட்டிற்கு அனுமதி அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்தது திமுகவின் திட்டமிட்ட சதிதான் என பலரும் கூறி வந்தனர். அதேபோல 21 கேள்விகள் கொடுக்கப்பட்டு அதற்குரிய விளக்கங்களை அளிக்குமாறு தமிழக வெற்றி கழகத்திற்கு போலீசார் நிபந்தனையும் வைத்தனர். மேற்கொண்டு இந்த கூட்டத்தில் சிறார்களுக்கு அனுமதி இல்லை என்றும் கூறியுள்ளனர்.
அதிமுக மற்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் பலர் தமிழக வெற்றிக் கழகத்தில் இந்த மாநாட்டில் இணைய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. குறிப்பாக அதிமுக பன்னீர் செல்வத்தின் மகன் இணைய இருப்பதாக கூறுகின்றனர். மேலும் இந்த கூட்டத்திற்கு எம்பி ராகுல் காந்தியி கலந்து கொள்ள இருப்பதாக அவர் கட்சியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். இதனை தடுக்கும் வகையில் தான் தற்பொழுது ஸ்டாலின் தனது எக்ஸ் வலைத்தளத்தின் மூலம் அவருக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
அதேபோல விஜயகாந்த் புகைப்படம் திறப்பு இருக்கும் இன்றும் அதற்காக கட்டாயம் பிரேமலதா விஜயகாந்த் வருகை தர உள்ளதாகவும் கூறுகின்றனர். செட் எப்படி இருக்க வேண்டும் நிர்வாகிகள் உட்காருமிடம் என அனைத்தையும் தனித்துவமாக விஜய் அவர்களே ஆலோசனை செய்து தனது கருத்துக்களை தெரிவித்துள்ளாராம். குறிப்பாக கட்சி கொடி வெளியீட்டின் போது தனது பெற்றோர்களுக்கு முதல் உரிமை கொடுக்காமல் கிறிஸ்துவ மற்றும் இஸ்லாமிய மதத்தை சேர்ந்தவர்களே முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர்.
இதற்கு முக்கிய காரணம் தவெக வாரிசு அரசியல் என பெயர் வாங்கி விடக்கூடாது என்பதற்காகவே அந்த ஏற்பாடு செய்யப்பட்டதாம். அதேபோல யார் யாருக்கும் முன்னுரிமை கொடுக்க வேண்டும் எங்கு அமர வைக்க வேண்டும் என்பது குறித்து பல ஆலோசனைகள் செய்து வருவதாகவும் கூறுகின்றனர்.