Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளப்போகும் பிகில் நடிகை! ஓட்டிங்க்கு தயாராகும் ரசிகர்கள்!

பிக்பாஸ் வரும் அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்க உள்ளதாக தகவல்கள் வருகின்றன. மேலும் அதற்கான பணிகள் ஜெட் வேகத்தில் நடைபெற்று வருவதாகவும் தெரிகிறது. 

போட்டியாளர்களை தேர்வு செய்து கொண்டிருக்கும் அந்நிகழ்ச்சியின் குழுவினர் அதனை  சீக்ரெட்டாக வைத்துள்ளனர். இருந்தபோதிலும் சில சமயங்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க பங்கேற்கும் போட்டியாளர்கள் பற்றிய விபரங்கள் கசிவது வழக்கமே.அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்பது குறித்து மாறி மாறி பேசிக்கொண்டிருந்த நடிகையின் பெயர் உறுதியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 4 தொடங்க இருக்கும் நாள் நெருங்க நெருங்க பிக்பாஸ் வீட்டிற்கும் செல்ல போகும் பிரபலங்கள் யார் என்று அறிந்துகொள்ள மக்கள் அதிகமாக ஆர்வம் காட்டி வருகின்றனர். டாப் 16 போட்டியாளர்கள் இந்த வாரத்தில் தேர்வு செய்யப்பட உள்ளதாகவும் இவர்கள் 15 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு கொரோனா சோதனைக்கு உட்படுத்தப்பட போவதாகவும்  அதற்குப் பின்தான் நிகழ்ச்சியில்  பங்கேற்க வைக்கப்படுவார்கள் என்றும் தெரிகிறது.

பிகில் படத்தில் தென்றல் என்ற ரோலில் நடித்தவர் தான் அமிர்தா ஐயர். இவர் சில நாட்களாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறாரா இல்லையா என்ற விவாதத்தை ரசிகர்களின் மத்தியில் ஏற்படுத்தி வந்தார். பிக்பாஸ் ஆரம்பத்திலேயே இவரது பெயர் அடிபட்டபோது  எதற்காக என் பெயரை தேவையில்லாமல் இருக்கிறீங்க? என்ற ட்விட்டர் பதிவினை வெளியிட்டார் அமிர்தா ஐயர்.

தற்போது இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுடன் சாட் செய்து , பிக்பாஸில்  பங்கேற்பீர்களா? என்ற கேள்விக்கு எனக்கு தெரியாது அது சஸ்பென்ஸ் ஆகவே இருக்கட்டும் என ரசிகர்களிடம் தெரிவித்தார். இது இவர் பிக்பாஸ் வீட்டில் பங்கேற்க போகிறார் என்பதை உறுதி செய்யும் கூற்றாக அமைந்துள்ளது. சமூக வலைத்தளங்களிலும் நடிகை அமிர்தா ஐயர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க போவது உறுதி என்ற தகவல் பரவி வருகிறது.

Exit mobile version