Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக் பாஸ்4ல் சாண்டிக்கு பதில் இவரா?புது போட்டியாளர்களை களமிறக்க உள்ள பிக் பாஸ்!

ஹிந்தி,தெலுங்கு போன்ற மொழிகளில் எல்லாம் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்ப  தொடங்கப்பட்ட நிலையில் தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக சிறிது காலதாமதம் ஆகிறது.அக்டோபர் 4 அல்லது 11ஆம் தேதி பிக் பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக போட்டியாளர்களை தனிமை படுத்திய போது இரு போட்டியாளர்களுக்கு கொரோனா உறுதியானது.இதனால் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாக இன்னும் சில கால தாமதம் ஏற்படும் என்று ரசிகர்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கின்றனர்.

தற்போது  கொரோனா உறுதியான போட்டியாளர்களுக்கு பதிலாக புதிய 2 போட்டியாளர்களை களமிறக்கியுள்ளது பிக் பாஸ் சீசன் 4. அவர்களில் ஒருவர் யாரெனில் 80-களில் முன்னணி கதாநாயகனாக வலம் வந்த நடிகர் சுரேஷ் ஆவார். இவர் தற்போது சில படங்களில் அப்பாவாகவும் சில குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

இரண்டாவது நபர் யார் என்றால் அவர்தான் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் தொகுப்பாளினியான அர்ச்சனா.இவர் தொகுத்து வழங்கும் நிகழ்ச்சியினை பார்ப்பவர் அனைவரும் வயிறு குலுங்கச் சிரிப்பது உறுதி.Last சீசனில் சாண்டி இருந்து அனைவரையும் சிரிக்க வைத்தது போல இந்த சீசனில் அர்ச்சனா இருப்பார் என்று நம்பப்படுகிறது.

இந்த சீசனில் பல பிரபலங்கள் களமிறங்கி உள்ளதால் யாருக்கு தங்களுடைய சப்போட் அளிப்பது என்று மக்கள் குழம்பியுள்ளனர்.விஜய் டிவியின் அடுத்த ப்ரோமோவிற்காக காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version