Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக் பாஸ் வீட்டுக்குள் நுழைய உள்ள 17-ஆவது பங்கேற்பாளர்! சர்ப்ரைஸ் என்ட்ரியால் அதிர்ந்துபோன கோ கன்டஸ்டன்ட்கள்!

விஜய் டிவியின் டிஆர்பி நிறுத்தும் ஒரே கருவியாக இருப்பது உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் ரியாலிட்டி ஷோவான பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் முதல் மூன்று சீசன்களில் வெற்றி அடைந்த நிலையில் தற்போது நான்காம் சீசன் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது.

கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கப்பட்ட இந்த ஷோ பரபரப்பான புரோமோ களை வெளியிட்டு தினமும் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி வருகிறது.

மேலும் பிக்பாஸ் வீட்டினுள் நுழைய தற்போது 17 வதாக ஒருத்தர் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

ஏற்கனவே பிக் பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக VJ அர்ச்சனா தேர்வு செய்யப்பட்டதும் நாம் அறிந்ததே. ஆனால் அவர் பணிபுரிந்து வரும் ஜீ தமிழ் தொலைக்காட்சி அவரை தன்னுடைய போட்டி தொலைக்காட்சி நிறுவனமான விஜய் டிவி நிகழ்ச்சியில் பங்கேற்க தடை விதித்ததால் அந்நிகழ்ச்சியில் அவர் இறுதிநேரத்தில்  பங்கேற்கவில்லை.

இவ்வாறு இருக்க தற்போது அந்தப் பிரச்சனை சுமூகமாக முடிந்து விட்டதாகவும் விரைவில் அர்ச்சனா பிக் பாஸ் வீட்டுக்குள் சர்ப்ரைஸ் எண்ட்ரி ஆக இருக்கிறார் என்ற தகவலும் இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Exit mobile version