Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக் பாஸ் சீசன் 5 ல இவங்க தான் இருக்காங்கலா! இவங்க என்ன செய்ய காத்துட்டு இருக்காங்களோ தெரியலையே??

Big Boss Season 5 Do you know what are waiting to do?

Big Boss Season 5 Do you know what are waiting to do?

பிக் பாஸ் சீசன் 5 ல இவங்க தான் இருக்காங்கலா! இவங்க என்ன செய்ய காத்துட்டு இருக்காங்களோ தெரியலையே??

பொதுவாக நம் அனைவர் வீட்டுத் தொலைக்காட்சிகளிலும் காட்யம் விஜய் டிவி இருக்கும். அதில்   ஒளிபரப்பாகும் அனைத்து சீரியல்கள் மற்றும் ரியாலிட்டி ஷோகளும் அனைவருக்கும் பிடிக்கும். மேலும் இதில் சிறப்பாக ரியாலிட்டி ஷோக்கள் செம்ம என்டர்டயின்மேன்ட் ஆகா இருக்கும். பிக் பாஸ், சூப்பர் சிங்கர் குக் வித் கோமாளி, மொரட்டு சிங்கல்ஸ் போற என்டர்டயின்மேன்ட் ஷோக்களுக்கு பஞ்சம் இல்லை என்று தான் கூற வேண்டும். மேலும் வருடம் தோறும் சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்க்கும் நிகழ்ச்சி தான் பிக் பாஸ்.  

பிக் பாஸ் இதில் ஒரே வீட்டில் 15 பிரபலங்கள் 100 நாள்கள், தொலைகாட்சி, செல்போன் இல்லாமலும் மற்றும் அவர்களின் உரவினர்களை கூட சந்திக்க கூடாது 100 நாட்களுக்கு பிக் பாஸ் விட்டில் அடைக்கப்பட்டு விடுவார்கள். மேலும் பிக்பாஸ் சொல்லும் வேலைகளையும் டாஸ்க்குகளையும் செய்து யார் சிறந்தவர்கள் என்று நிருபிக்கும் போட்டி தான் பிக் பாஸ். மேலும் இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகின்றது.   

இதுவரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் 4 பருவங்கள் முடிந்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் 100 நாட்களை கடந்து அந்த வீட்டில் சிறந்து விளங்கும் ஒருவருக்கு  பிக் பாஸ் டைட்டில் வின்னர் விருதும் 50 லட்சம் ரோக்கமும் வழங்கப்படும். முதல் பருவத்தின் டைட்டில் வின்னராக ஆரவ், இரண்டாம்   பருவத்தின் டைட்டில் வின்னராக ரித்விகா, மூன்றாம் பருவத்தின் டைட்டில் வின்னராக முகின்ராவ் மற்றும் இந்த வருடம் முடிந்த நான்காம் பருவத்தின் டைட்டில் வின்னராக ஆரி அவர்களும் மக்களின் வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றனர். தற்போது இந்த வருடம் நடைபெறவிருக்கும் பிக் பாஸ் பருவம் 5 க்காக  சின்னத்திரை ரசிகர்கள் பெரிதும் எதிர்பாத்து வருகின்றனர்.

இந்த நிலையில் பிக் பாஸ் பருவம் 5-ல் கலந்துகொள்ளும் பிரபலங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. நடிகர் சித்தார்த், நடிகை ராதா, நடிகர் ராதா ரவி, நடிகை லட்சுமி மேனன், நடிகை சோனா, சொல்வதேல்லாம் உண்மை தொகுப்பாளினி லஷ்மி ராமகிருஷ்ணன், பூனம் பாஜ்வா, குக்கு வித் கோமாளி பிரபலம் அஸ்வின், சுனிதா, தர்ஷா குப்தா, மற்றும் பவித்ரலஷ்மி என தகவல் வந்துள்ளது.

Exit mobile version