பிரபல தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க தயங்கி பல நட்சத்திரங்கள் பின்வாங்கியுள்ள தகவல்கள் வெளியாகியுள்ளன.
உலகெங்கும் பிரபலமான பிக்பாஸ் நிகழ்ச்சி இந்தியாவில் பிக்பாஸ் என்னும் பெயரில் இந்தியில் முதலாவதாக ஒளிப்பரப்பாகி வெற்றிபெற்றது. ஒரு மனிதனுடைய தனித்துவம் மற்றும் அவர்கள் மற்றவர்களோடு நடந்து கொள்ளும் விதம் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றுவருகின்றன.
காதல்,கவர்ச்சி,விளம்பரம் போன்றவற்றையே அடிநாதமாக கொண்டு தமிழில் பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிப்பரப்பாகிவருகிறது. இந்நிலையில் இந்நிகழ்ச்சின் அடுத்த சீசனுக்கான ப்ரோமோவை மக்கள் பெரிதும் கொண்டாடி வருகின்றனர். மக்கள் நீதி மய்யத்தின் தலைவரும் நடிகருமான கமலஹாசன் இன்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி அவ்வப்போது தனது அரசியல் நிலைப்பாட்டை தெரிவித்துவந்தார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள பிரபலங்கள் பலரும் தயங்கிவருவதாக கூறப்படுகிறது. ஏனெனில் முந்தைய சீசன்களில் பங்கேற்ற பலரும் எதிர்மறையாக்கப்பட்டதே முக்கிய காரணமாக கூறப்படுகிறது. குறிப்பாக நமீதா,காயத்ரி ரகுராம், கஞ்சா கருப்பு, மகத் போன்ற பல பிரபலங்கள் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அதிகளவில் ரசிகர்களை இழந்தனர். இதனால் பல பிரபலங்கள் அடுத்தடுத்த சீசனில் பங்கேற்க தயங்கினர்.
அதேபோல் இந்தாண்டும் பிரபலங்கள் பங்கேற்க தயங்குவதால் வழக்கம்போல் விஜய் டிவி பிரபலங்களை கொண்டே இந்நிகழ்ச்சியை நடத்தும் திட்டத்தில் அந்த தொலைக்காட்சி ஈடுப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.