Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க இருக்கும் முக்கியமான அந்த மூன்று நபர்கள்!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி சென்ற ஞாயிற்றுக்கிழமை உடன் நிறைவு பெற்றது, இதில் சின்னத்திரை நடிகரான ராஜு ஜெயமோகன் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேபோல விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா ரன்னர் அப் என்ற நிலையில் தேர்வானார். இதனை அடுத்து முதல் முறையாக தமிழில் ஒளிபரப்பாக இருக்கும் பிக் பாஸ் ஓ டி டி நிகழ்ச்சிக்கான அறிவிப்பு வெளியானது.

அதாவது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் செயலியில் பிக்பாஸ் அல்டிமேட் என்ற பெயரில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது. இதற்காக வெளியான விளம்பரத்தில் அசத்தலாக ஒருசில குறிப்புகள் இருக்கின்றன .அதாவது இந்த நிகழ்ச்சி 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும் என்றும், வார இறுதி நாட்களில் நடிகர் கமல்ஹாசன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவார் என்றும், கூறப்படுகிறது.

இந்த பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முதலில் வந்த 4 சீசன்களில் பங்கு பெற்ற போட்டியாளர்களின் ஒரு சிலர் மட்டுமே பங்கேற்பார்கள் என்றும் கூறப்படுகிறது. அதனடிப்படையில் மணி சுரேஷ் சக்கரவர்த்தி, சினேகன், அபிராமி, சுஜா, வருணி, தாடி பாலாஜி அனிதா சம்பத் மற்றும் பாலாஜி முருகதாஸ் உள்ளிட்டோரின் பெயர்கள் வெளியாகி வருகிறது. ஆனாலும் இதுவரையில் உறுதியான தகவல் கிடைக்கவில்லை.

அதே சமயம் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் 5வது சீசனில் பங்கேற்ற யாரும் பங்கேற்க மாட்டார்கள் என்று தெரிவிக்கப் பட்டது. இருந்தாலும் தற்சமயம் ஒரு புதிய தகவல் வெளியாகி இருக்கிறது. அதாவது பிக்பாஸ் 5 வது சீசனில் பங்கேற்றவர்களில் 3 போட்டியாளர்கள் பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் பங்கேற்க இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

அதனடிப்படையில் தாமரைச்செல்வி பங்கேற்பு தற்சமயம் உறுதி செய்யப்பட்டு இருக்கிறது எனவும், அவரை அடுத்து விஜய் டிவியின் தொகுப்பாளர் பிரியங்கா மற்றும் அபிஷேக் உள்ளிட்டோரும் பங்கேற்க இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Exit mobile version