Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ரீல்சில் மிகப்பெரிய மாற்றம்!! இன்ஸ்டாகிராம் பயனர்கள் குதூகலம்!!

இன்ஸ்டாகிராம் என்பது மிகப் பெரிய சோசியல் மீடியா பிளாட்பார்ம். அதில் சமீபகாலமாகவே ரிலீஸ் மூலம் பலரும் அவர்களது திறமையினால் பெரிதளவில்  சம்பாதித்து இன்ஃப்ளுயூன்ஸர்ஸாகவும்வலம் வருகின்றனர். வாட்ஸ்அப் செயலி போன்று இன்ஸ்டாகிராம் இல்லாத ஆண்ட்ராய்டு மொபைல்களை பார்ப்பதே அரிது. அதிலும் ஒரு ப டி மேலாக, சிறியவர்கள் முதல் வயதானவர்கள் வரை அதில் ரிலீஸ் போட்டு பிரபலமாகி வருகின்றனர்.

இதனை மேம்படுத்தும் வகையில் இன்ஸ்டாகிராம் நிறுவனம் ஒரு பெரிய அப்டேட்டை கொண்டு வந்துள்ளது. அதன்படி, ரீல்ஸ் இதுவரை இன்ஸ்டாகிராமில் அதிகபட்சமாக 90 செகண்டுகளுக்கு மட்டுமே வீடியோ அப்லோட் செய்ய முடியும். தற்சமயம் இதன் நேர விகிதத்தை அதிகரித்துள்ளது. அதன்படி, அதிகபட்சமாக மூன்று நிமிடங்கள் வரை வீடியோ அப்லோட் செய்யலாம் என பரிந்துரைத்துள்ளது. இதனால் ரிலீஸ் இன்ஃப்ளுயூசர்ஸ் மிகுந்த மகிழ்ச்சியில் ஆரவாரம் செய்து வருகின்றனர்.

இது தற்சமயம் பேசும் பொருளாக அமைந்துள்ளது. மேலும், இச்செயலி மூலம் பலரது திறமைகளும் வெளி வருகின்றன. அந்தவகையில் வீடியோ நேரத்தை அதிகரித்திருப்பது இவர்களுக்கு பலனளிக்கும் வகையில் இருக்கும்.

Exit mobile version