உடல் ஆரோக்கியத்திற்காக உலர் விதைகள் மற்றும் உலர் பழங்கள் போன்வற்றை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.பாதாம்,முந்திரி,பிஸ்தா மற்றும் வால்நட் போன்ற உலர் விதைகளில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் தினமும் அதை சாப்பிட வேண்டும்.வளரும் குழந்தைகளுக்கு உலர் விதைகளை கொடுக்க வேண்டியது முக்கியம்.
உலர் விதைகளில் அதிக விலை உள்ள வால்நட்டை சூப்பர் மார்க்கெட்டில் பார்த்திருப்பீர்கள்.உலர் விதைகளிலேயே தனித்துவம் கொண்டவை வால்நட்.இதில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம்,புரதம்,கார்போ ஹைட்ரேட்,கால்சியம்,செலினியம்,பாஸ்பரஸ்,மெக்னீசியம்,துத்தநாகம்,வைட்டமின்கள் நிறைந்து காணப்படுகிறது.
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த தினம் 5 வால்நட் சாப்பிடலாம்.வால்நட் பால் பருகி வந்தால் மனச் சோர்வு நீங்கும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது.இதய ஆரோக்கியம் சிறக்க வால்நட் சாப்பிடலாம்.
வால்நட்டில் ஏகப்பட்ட நன்மைகள் அடங்கியிருந்தால் சிலருக்கு உடல் பாதிப்புகளை ஏற்படுத்திவிடும்.யாரெல்லாம் வால்நட் சாப்பிடக் கூடாது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
வயிறு சம்மந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் வால்நட் சாப்பிடக் கூடாது.அல்சர்,வயிறு எரிச்சல் உள்ளவர்கள் வால்நட்டை தவிர்க்க வேண்டும்.
ஒவ்வாமை இருபவர்கள் வால்நட்டை தவிர்க்க வேண்டும்.தோல் நோய்களான சொறி,சிரங்கு போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் வால்நட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
உடல் எடை அதிகம் உள்ளவர்கள் வால்நட்டை தவிர்க்க வேண்டும்.வாயுத் தொல்லையால் அவதியடைந்து வருபவர்கள் வால்நட் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.