Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அமித்ஷா கைக்குப்போன எடப்பாடி பழனிச்சாமி குறித்த ரகசிய அறிக்கை! ஷாக்கில் எதிர்க்கட்சித் தலைவர்!

அதிமுகவின் உட்கட்சி விவகாரத்தில் பன்னீர்செல்வம் மற்றும் சசிகலா உள்ளிட்டவருடன் எடப்பாடி பழனிச்சாமி ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்பதுதான் பாஜகவின் முக்கிய மற்றும் ஒரே விருப்பமாக இருக்கிறது.

ஆனால் வழக்கம் போல இதற்கு எடப்பாடி பழனிச்சாமி சம்மதம் தெரிவிக்காமல் பிடிவாதம் பிடித்து வருவதால் உட்கட்சி பஞ்சாயத்தும் முடிவுக்கு வரவில்லை, கூட்டணி விவகாரமும் ஆரம்பிக்கப்படவில்லை.

ஆகவே நேற்று இரண்டு பேருமே நரேந்திர மோடி இடம் பேசி பிரச்சனைக்கு வரும் முடிவு கட்ட திட்டமிட்டார்கள் ஆனால் இருவரையும் ஒன்று சேருமாறு அழுத்தமான சமிக்கையை செய்துவிட்டு பிரதமர் நரேந்திர மோடி கிளம்பிச் சென்றுள்ளார் இந்த நிலையில் இன்று அமைச்சர் சென்னை வந்துள்ளார் அனேகமாக பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசுவதாகவும் தெரிகிறது இந்த நிலையில் சென்னை வந்துள்ள அமித்ஷாவிடம் பாஜகவின் தரப்பில் என்னென்ன பேச இருக்கிறார்கள்? அமித்ஷா என்ன முடிவெடுக்க போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்திருக்கிறது.

அதேநேரம் எடப்பாடி பழனிச்சாமி அமித்ஷா சந்திப்பதற்கான வாய்ப்பில்லை என்றும் சொல்லப்படுகிறது இதற்கு பல்வேறு காரணங்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள் நாமக்கல் கூட்டத்தில் மெகா கூட்டணி என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருந்தது தொடர்பான தகவல் டெல்லி வரையில் சென்று விட்டதாகவும் இப்படி திடீரென்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தது மேலிடத்தை சங்கடப்படுத்தியதாகவும் தெரிவிக்கிறார்கள்.

காரணம் கூட்டினியை முடிவு செய்வதும் இறுதி செய்வதும் கூட்டணி தலைமை தான் அந்த கூட்டணி தலைமை பாஜக என்பது இங்கே வலியுறுத்தப்பட்டு வருகிறது கடந்த தேர்தலிலும் இப்படித்தான் முதலமைச்சர் யார் என்பதை கூட்டணியின் தலைமை முடிவு செய்யும் என்று தற்போதைய மத்திய அமைச்சர் முருகன் முதல் வானதி சீனிவாசன் வரையில் தெரிவித்துக்கொண்டிருந்தார்கள்.

சட்டசபை தேர்தலில் மத்திய பாஜகவின் பங்கு குறைவு தான் என்றாலும் இறுதி முடிவு எடுப்பது நாங்கள் தான் என்பதில் பாஜக விட்டுக் கொடுக்காமல் இருக்கிறது. சட்டசபை தேர்தலுக்கு அப்படி என்றால் நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி முடிவை பிறர் எடுக்க விடுவதற்கான வாய்ப்பே இல்லை. ஆனால் அதையெல்லாம் முந்திக் கொண்டு எடப்பாடி பழனிச்சாமி இப்படி அறிவித்திருப்பது லேசான கடுப்பை கொடுத்திருப்பதாகவே தெரிகிறது. ஏற்கனவே ஒருங்கிணைந்த அதிமுகவிற்கு எடப்பாடி பழனிச்சாமி பிடிவாதம் பிடித்து வருகிறார். இந்த நிலையில், அடுத்தடுத்த அவருடைய அறிவிப்புகள் செயல்பாடுகள் உள்ளிட்டவை பாஜகவை சங்கடப்படுத்தவே செய்கிறது என்றும் சொல்லப்படுகிறது.

இந்த நிலையில் இன்று சென்னைக்கு வரும் அமித்ஷாவிடம் ஒரு முக்கிய பைலை பாஜக தரப்பிலிருந்து கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதில் பாஜகவிற்கு எதிராக எடப்பாடி பழனிச்சாமி முன்னெடுத்த வேலைகள் அவருடைய அரசியல் கணக்குகள் போன்றவைகள் அனைத்தும் ஒரு அறிக்கையாக தயார் செய்து அமித்ஷாவிடம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

ஏற்கனவே எடப்பாடி பழனிச்சாமி மீதான நம்பகத்தன்மை மேலிடத்திற்கு குறைந்திருக்கும் நிலையில், இந்த ரகசிய அறிக்கையானது மேலும் அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக சொல்லப்படுகிறது. அந்த அறிக்கையில் இருக்கின்ற விபரங்கள் என்னென்ன என்று தற்போது வரையில் உறுதியாக தெரியவில்லை.

ஆனால் அமித் ஷாவை பன்னீர்செல்வம் சந்திக்க நேரலாம் அப்படி சந்தித்துவிட்டால் எடப்பாடி மீதான புகார்களை மற்றும் அதிருப்திகளை தன்னுடைய தரப்பில் இருந்தும் எடுத்துச் சொல்ல வாய்ப்பிருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இதுவும் மேல் இடத்தை எந்த அளவிற்கு கோபமடைய செய்யப் போகிறதோ தெரியவில்லை.

எடப்பாடி மீதான நம்பகத்தன்மை பாஜக மேலிடத்திற்கு குறையும் பட்சத்தில் எடப்பாடி இல்லாத கூட்டணிக்கு பாஜக தயாராகும் பட்சத்தில் இதனை எப்படி எடப்பாடி பழனிச்சாமி எதிர்கொள்ளப் போகிறார் என்பதையும் பொறுத்திருந்து பார்க்க வேண்டியிருக்கிறது.

Exit mobile version