தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்! முதல் படமே வித்தியாசமான கதை!!

0
317
#image_title

தமிழ் சினிமாவில் ஹீரோவாகும் பிக்பாஸ் பிரபலம்! முதல் படமே வித்தியாசமான கதை!

தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியின் மூலமாக பிரபலமான விஜே கதிரவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டால் எளிமையாகவும் வேகமாகவும் பிரபலம் அடைந்து விடலாம் என்று நினைத்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள கடும் போட்டி நிலவி வருகிறது. பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பலர் நடிகராகும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது

அந்த வரிசையில் நடிகர் ஆரவ், நடிகர் ஹரீஸ் கல்யான், நடிகர் தர்ஷன், நடிகர் கவின், நடிகை லாஸ்லியா, நடிகை சம்யுக்தா சன்முகநாதன், கவிஞர் சினேகன் மற்றும் பலர் சினிமாவில் நடித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஒவ்வொரு.துறையில் பிரபலமாக இருந்தவர்கள். பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலம் அடைந்து சினிமாவில் நடிக்க தொடங்கியுள்ளனர்.

இவர்களின் வரிசையில் பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மேலும் பிரபலமடைந்த விஜே கதிரவன் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகம் ஆகியுள்ளார்.

அறிமுக இயக்குனர் ஜோயல் விஜய் அவர்கள் தான் விஜே கதிரவன் நடித்துள்ள திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்திற்கு கூடு என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஜே கதிரவன் நடித்துள்ள கூடு திரைப்படம் உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு எழுதப்பட்ட. கதை என்று படக்குழு கூறியுள்ளது. விஜே கதிரவன் நடிப்பில் உருவாகியுள்ள கூடு படத்திர் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.