Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எஸ்.ஜே சூரியாவுக்கு இருக்கும் பிரச்சனை பிக்பாஸ் பிரதீப்புக்கும் இருக்கின்றது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!!

#image_title

எஸ்.ஜே சூரியாவுக்கு இருக்கும் பிரச்சனை பிக்பாஸ் பிரதீப்புக்கும் இருக்கின்றது!!! வெளியான அதிர்ச்சி தகவல்!!!

நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்களுக்கு இருப்பது போலவே தற்பொழுது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ள பிரதீப் ஆண்டனிக்கும் அதே பிரச்சனை இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

வழக்கத்திற்கு மாறாக இந்த முறை பாக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இரண்டு வீடுகளை கொண்டதாக இருக்கின்றது. மேலும் ஆரம்பத்திலேயே சண்டைகள் தொடங்கிய விட்ட நிலையில் ஒளிபரப்பாகும் அனைத்து ஏபிசோடுகளும் பரபரப்பாகவே இருக்கின்றது. இந்நிலையில் நேற்று(அக்டோபர்4) எகிப்தில் தனக்கு ஒருவித மனநோய் உள்ளது என்று பிரதீப் ஆண்டனி அவர்கள் வெளிப்படையாக கூறியிருந்தார்.

தற்பொழுது பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு பாப்புலாரிட்டி டாஸ்க் கொடுக்கப்பட்டு உள்ளது. அதில் பேசிய பிரதீப் ஆண்டனி தனக்கு ஒருவிதமான மன நோய் இருப்பதாக கூறி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தினார். அதாவது அவருக்கு ஓசிடி என்னும் மன நோய் இருக்கின்றதாம். இதனால் ஒரே விஷயத்தை திரும்ப திரும்ப வைப்பது தான் இந்த ஓசிடி நோய் ஆகும்.

சமீபத்தில் நடிகர் விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி திரைப்படம் வெளியானது. இந்த திரைப்படத்தில் நடிகர் எஸ்.ஜே சூரியா அவர்கள் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் கவனத்தை பெற்றார். இவருடைய நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது.

இதையடுத்து சமீபத்தில் திரைப்படம் குறித்து நடிகர் விஷால் அவர்கள் அளித்த பேட்டியில் நடிகர் விஷால் அவர்களுக்கு சுத்தத்தை குறித்த ஓசிடி என்னும் மனநோய் நடிகர் எஸ்ஜே சூரியா அவர்களுக்கு இருப்பதாக கூறினார். மேலும் படப்பிடிப்பு தளத்தில் நடைபெற்ற சில சம்பவங்களையும் எடுத்துக்காட்டாக கூறினார்.

இந்நிலையில் பிக்பாஸில் கலந்து கொண்டுள்ள பிரதீப் எவ்வாறு இந்த மனநோயை தாக்கு பிடித்து எத்தனை நாள் உள்ளே இருக்கப் போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. இப்பொழுது பிரதீப் ஆண்டனி பாக்யராஜ் வீட்டில் மற்ற போட்டியாளர்களுடன் சற்று தள்ளிய இருக்கிறார். பொறுத்திருந்து பார்க்கலாம். இவர் என்ன செய்ய போகிறார் என்று.

Exit mobile version