Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

TRP- யில் மண்ணை கவ்விய பிக் பாஸ் சீசன் 8!! விஜய் டிவியை பின்னுக்கு தள்ளிய விஜய் சேதுபதி!!

Bigg Boss season 8 where D R Bill has taken the floor!! Vijay Sethupathi pushed back Vijay TV!!

Bigg Boss season 8 where D R Bill has taken the floor!! Vijay Sethupathi pushed back Vijay TV!!

ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு யுக்தி கைக்கொடுக்கவில்லையா!!

விஜய் டிவில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ், இதுவரை 7சீசன்கள் நடைபெற்று முடிந்துள்ளது. சீசன் 1 முதல் 7 வரை  நடிகர் கமலஹாசன் தொகுப்பாளராக களமிறங்கி வெற்றிகரகமாக இந்த நிகழ்ச்சியை நடத்தினார். தற்போது பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி தொகுப்பளராக அறிமுகமாகியுள்ளார்.

 இந்த நிகழ்ச்சியில் ஆளும் புதுசு ஆட்டமும் புதுசு என்ற தலைப்புடன் போட்டியாளர்களிடையே புதிய விதிமுறைகளை கையாண்டு வருகிறது. இருப்பினும் இந்த  சீசன் 8 -யின்  டிஆர்பி ரேடிங் சீரியலை விட குறைவாக பெற்று உள்ளது என்பது தான் உண்மை.

 முந்தய ஆண்டு பிக்பாஸ் சீசனில் போட்டியாளர்களின் வீடு இரண்டாக பிரிக்கப்பட்டு அதில் போட்டிகள் நடைபெறும், ஆனால் இம்முறை வீட்டின் நடுவே கோடு போட்டு ஆண்கள் ,பெண்கள், என இரண்டு ஆணிகளாக பிரிந்தும், விளையாட்டாக எடுத்து கொள்ள வேண்டிய போட்டியை ஈகோ பிரச்சினையாக மாற்றி விளையாடுவதும் பார்வையாளர்களை சலிப்படைய செய்வது போல அமைந்துயுள்ளது.

 இந்த சீசனில் இடம் பெற்று உள்ள 18 போட்டியாளர்களில் 13 பேர் விஜய் தொலைக்காட்சியில் வரும் தொடர்களில் நடித்தவர்கள், அப் போட்டியாளர்களின் செயல்கள் நடிப்பது போன்றுள்ளது என்ற கருத்து சமூக பொதுவெளியில் நிலவிவருகிறது. மேலும் விஜய் சேதுபதி போட்டியாளர்களை கையாளும் விதம் ஒரு தலைப்பட்சமாக இருக்கிறது, என்ற கருத்தும் பரவிவருகிறது.

 இது போன்ற குழப்பங்களால் பிக் பாஸ் சீசன் 8 யின் டிஆர்பி ரேடிங் சீரியலை விட குறைந்து இருக்கலாம். அந்த வகையில் விஜய் டிவி ஒளிபரப்பாகின்ற சிறகடிக்க ஆசை  சீரியல் டிஆர்பி 8.2 என்ற புள்ளிகளையும்,பாண்டியன் ஸ்டோர்ஸ் 7 என்ற டிஆர்பி  புள்ளிகளையும் பெற்றுள்ளது.பாக்கியலட்சுமி சீரியல் 6.4 என்ற டிஆர்பி புள்ளிகளை பெற்றுள்ளது.

இந்த தொடர்களை விட குறைவான டிஆர்பி புள்ளியான 6 என்ற வகையில் இந்த வார ஒளிபரப்பில் பிக் பாஸ் சீசன் 8  நிகழ்ச்சி பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version