Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி!!! வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையும் 2 பிரபலங்கள்!!!

#image_title

அடுத்தடுத்து சர்ப்ரைஸ் கொடுக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி!!! வைல்ட் கார்ட் என்ட்ரியாக நுழையும் 2 பிரபலங்கள்!!!

தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் அடுத்தடுத்து இரண்டு பிரபலங்கள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் போட்டியாளர்களாக கலந்து கொள்ள இருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 7வது சீசன் கடந்த அக்டோபர் மாதம் 1ம் தேதி தொடங்கியது. இதில் பிரதீப் ஆண்டனி, மாயா கிருஷ்ணன், விசித்ரா, விஷ்ணு, அக்சயா, வினுஷா, விக்ரம் உள்பட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

வழக்கம் போல நடிகர் கமல்ஹாசன் அவர்கள் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். ஆனால் வழக்கத்திற்கு மாறாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பிக்பாஸ் வீடானது பிக்பாஸ் வீடு ஸ்மால்பாஸ் வீடு என்று இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வாரமும் கேப்டனால் தேர்ந்தெடுக்கப்படும் ஆறு போட்டியாளர்கள் ஸ்மால்பாஸ் வீட்டுக்கு செல்ல வேண்டும். இந்நிலையில் முதல் நாளில் இருந்தே பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சாலைகளும் சச்சரவுகளாகவும் இருக்கின்றது. இதனால் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் செல்கின்றது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு புதுவிதமான சண்டைகள் வருவதால் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை பார்ப்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டு இருக்கின்றது. இந்நிலையில் ரசிகர்கள் அனைவரும் எப்பொழுது வைல்ட் கார்டு என்ட்ரியில் புதுப் போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைவார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்த வகையில் தற்பொழுது வைல்ட் கார்ட் என்ட்ரி குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

அதன்படி அடுத்த வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்ட் கார்ட் என்ட்ரியில் அடுத்தடுத்து இரண்டு போட்டியாளர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த முறை வைல்ட் கார்ட் என்ட்ரியாக புகழ் பெற்ற கானா பாடகர் கானா பாலா அவர்களும் நடிகயும் விஜேவும் ஆன அர்ச்சனா ஆகிய இரண்டு பேரும் போட்டியாளராக கலந்து கொள்ள இருக்கின்றனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

Exit mobile version