Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நாமினேஷனில் இடம் பெற்றதற்கு மகள் ஜோவிகாவை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் வனிதா !

Jovika vijaykumar

Jovika vijaykumar

நாமினேஷனில் இடம் பெற்றதற்கு மகள் ஜோவிகாவை புகழ்ந்து தள்ளிய பிக் பாஸ் வனிதா !

பிக் பாஸ் நிகழ்ச்சியானது ரசிகர்களின் வரவேற்பை பெற்ற ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும். இந்த பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ஏராளமான ரசிகர்கள் அதிகம் உள்ளனர். இந்த நிகழ்ச்சிக்கு தமிழ் தொகுப்பாளராக, கமலஹாசன் அவர்கள் பணிபுரிகின்றார்.

இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியானது 6 சீசன்களை கடந்து 7 வது சீசன் அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கியது.இந்த ஏழாவது சீசனில்,மொத்தம் 18 போட்டியாளர்கள் வீட்டிற்குள் சென்றனர்.இந்த சீசனில் பிக் பாஸ் வீடானது இரண்டு வீடாக பிரிக்கப்பட்டுள்ளது.ஒரு வீடே பயங்கரமான கலவரத்தை ஏற்படுத்த செய்யும்,இதில் இன்னொரு வீடு வேற லெவல்.

அவ்வாறாக வந்த முதல் நாளே வீட்டிற்கான தலைவரை தேர்ந்தெடுக்கும் டாஸ்க் வைத்து தலைவரை தேர்ந்தெடுத்தனர்.இதனை தொடர்ந்து முதல் வாரத்திற்கான நாமினேஷன் நடந்து முடிந்தது.

நாமினேஷன் தேர்வுவின் முடிவில், பிக்பாஸ் சீசன் 3யில் கலந்து கொண்ட வனிதா விஜயகுமாரின் மகள் ஜோவிகா அதிக பெயரால் நாமினேட் செய்யப்பட்டுள்ளார். நாமினேஷன் லிஸ்டுக்கு செல்லப்பட்ட ஜோவிக்காவிற்கு மொத்தம் 4 ஓட்டுகள் பதிவானது.வந்த முதல் வாரத்திலேயே வனிதா மகள் அதிக ஓட்டு வித்தியாசத்தில் நாமினேட் ஆகியுள்ளார்? என்ன இப்படி ஆகிவிட்டது என இதை குறித்து இணையதளத்தில் ஏராளமானோர் விமர்சனம் செய்து வந்தனர்.

அவர்களுக்கெல்லாம் முகத்தில் கரியை பூசும் வகையில், வனிதா விஜயகுமார் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மகளின் புகைப்படத்தை பதிவிட்டு “உன்னை நினைத்தால் பெருமையாக இருக்கிறது பேபி” haha you did it, you made on impression in the house, to @jovhika Vijay Kumar you get nominated proud of you baby என பதிவிட்டுள்ளார்.

இந்த செய்தியை பார்த்த பல பேர் நாமினேஷனுக்கு வந்ததற்காகவா? இந்த ஒரு பாராட்டு பதிவு என அதனுடம் இதையும் சேர்த்தது விமர்சித்து வருகின்றனர்.

Exit mobile version