Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பெரிய வேண்டுதல் போல? உருகும் மெழுகுவர்த்தியுடன் ஒரு போட்டோஷூட்!! பிக் பாஸ் ஜூலி! உருகிய ரசிகர்கள்

ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது வீரத்தமிழச்சி, பொண்ணுன்னா இப்படித்தான் தைரியமா இருக்கணும் என பலராலும் முன்னுதாரணமாக சொல்லப்பட்ட ஜூலி.

இதன் மூலம் பிரபலமான ஜூலி, பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வாய்ப்பு கிடைத்தது. தொடக்கத்தில் மக்கள் ஆதரவு அதிகம் கிடைத்த ஜூலிக்கு இடையில் அவர் சொன்ன பொய் அம்பலமானதால் பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.

தற்போது விளம்பர நிகழ்ச்சிகள் மற்றும் படங்களில் சிறுசிறு கேரக்டர்களில் நடிப்பதில் பிஸியாக இருந்த நிலையில், சமூக வலைதளங்களில் அவ்வபோது புகைப்படங்களைபதிவிடுவது வழக்கம். அப்படி தற்போது அனைவரும் வாயடைத்து போகும் வகையில் மெழுகுவர்த்தி போட்டோஷூட் செய்து அனைவரையும்  வியப்பில் ஆழ்த்தியது. இதைப் பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை கண்டபடி கலாய்த்து வருகின்றனர்.

இந்த போட்டோவில் புகைப்படத்தில் தோள்பட்டையில் சுடச்சுட மெழுகுவர்த்தியின் துளிகளை சிதற விட்டு அதில் லாவகமாக அந்த மெழுகுவர்த்தியை நிற்கவைத்து, இதுவரை பலரும் பார்த்திராத வகையில் எடுக்கப்பட்டுள்ள இந்த வித்தியாசமான போட்டோஷூட் பலரையும் கவர்ந்து பாராட்டுக்களைப்பெற்றது.என்ன வேண்டுதல் இருந்தாலும் இப்படியா? என்று கேலி கிண்டல்களுக்கும் ஆளாகியுள்ளது. இருந்தபோதிலும் இந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது.

 

Exit mobile version