Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் சீசன்4 படப்பிடிப்பு போட்டோவை வெளியிட்ட பிரபல நடிகர்!!

பிக்பாஸ் நிகழ்ச்சி  என்பது மக்கள் பெரிதும் ரசித்து பார்க்கக்கூடிய நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.  நிகழ்ச்சி தமிழில் மட்டுமல்லாமல் இந்தி தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் பிரபலமானது.

இந்நிகழ்ச்சியில் பிரபலங்கள் சிலரை 100 நாட்கள் சமூகத் தொடர்பு இன்றி ஒரே வீட்டில் பல கேமராக்கள் முன்னிலையில் வசிக்கும் போது நிகழும் சண்டை சச்சரவு போன்ற உணர்வுகளை படம்பிடித்து மக்களுக்கு காட்டப்படும் நிகழ்ச்சியாகும்.

பிக் பாஸ் தமிழைப் பொருத்தவரை கமலஹாசன் தான் 3 சீசன்களையும் தொகுத்து வழங்கியுள்ளார்.  பிக்பாஸ் தெலுங்கில் சீசன்1- ஐ பிரபல நடிகர் நானி தொகுத்து வழங்கினார். சீசன்2 நாகார்ஜுன் தொகுத்து வழங்கினார்.

தற்பொழுது தெலுங்கின் பிக்பாஸ் சீசன்4 பிரபல நடிகர் நாகஅர்ஜுன் தொகுத்து  வழங்க உள்ளார். தற்பொழுது பிக் பாஸ் சீசன் 4 தெலுங்கில் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அந்த படப்பிடிப்பு  காட்சியை சமூக வலைதளங்களில் நாகஅர்ஜுன் பதிவிட்டு வருகிறார்.

இந்த புகைப்படத்தில்  கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தையும் பின்பற்றும் வகையில் உடல் முழுவதும் பாதுகாப்பு கவசத்தை அணிந்துள்ள படி போட்டியாளர்கள் அந்த புகைப்படத்தில் இடம்பெற்றுள்ளனர்.

இதைப்பார்த்த இதைப் பார்த்த தெலுங்கு மற்றும் தமிழ் பிக்பாஸ் எப்போது பிக்பாஸ் வெளியாக  போகிறது என்ற ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். 

 

 

Exit mobile version