Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பிக்பாஸ் போட்டியாளர்களின் சம்பளம் குறித்த விவரம்-வெளியான தகவல்‌!!

பிக்பாஸ் வீட்டில் உள்ள 18 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ் இதுவரை நான்கு சீசன் களை கடந்து.தற்போது ஐந்தாவது சீசன் வெற்றிகரமாக மூன்று வாரங்களை கடந்துள்ளது.

இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இசைவாணி, ராஜூ ஜெயமோகன், மதுமிதா, அபிஷேக் ராஜா, நமிதா மாரிமுத்து, பிரியங்கா, அபினய், சின்ன பொண்ணு, பாவனி, நதியா சங், வருண், இமான் அண்ணாச்சி, ஐக்கி பெர்ரி, ஸ்ருதி, அக்ஷரா, தாமரைச்செல்வி, சி.பி சந்திரன், நந்தகுமார் உள்ளிட்ட 18 பேர் பங்கேற்றனர்.

இதில் முதல் வாரத்திலேயே தனது தனிப்பட்ட காரணங்களுக்காக நமிதா மாரிமுத்து நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த பிக் பாஸ் சீசன் 5 முதல் எலிமினேஷனில் மலேசியாவை சேர்ந்த நாடியா வெளியேற்றப்பட்டார். இதையடுத்து இன்று நடக்கும் எலிமினேஷனில் அபிஷேக் வெளியேற்றப்பட உள்ளார்.

இந்த நிலையில் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட 18 போட்டியாளர்களின் சம்பளம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இதில் அபினய்க்கு வாரத்திற்கு ரூ.2.75 லட்சமும், மதுமிதாவுக்கு ரூ.2.50 லட்சமும், பிரியங்காவுக்கு 2 லட்சமும், மற்றவர்களுக்கு அதைவிட குறைவாக சம்பளம் கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது ‌

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன் அபினய் யாரென்றே தெரியாத நிலையில், அவருக்கு அதிகபட்ச சம்பளம் வழங்கியுள்ளது. பிக்பாஸ் ரசிகர்களுக்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version