Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

முதல்நாளே கண்கலங்கிய பாடகி இசைவாணி.!! பிக்பாஸ் 5-ன்இன்றைய முதல் ப்ரோமோ.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடு காண முதல் புரோமோவில் தான் கடந்து வந்த பாதை குறித்து பாடகி இசைவாணி கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியுள்ளது.இந்நிலையில் பிக் பாஸ் வீட்டுக்குள் போட்டியாளர்கள் சென்று இரண்டாவது நாளான இன்று போட்டியாளர்கள் கடந்து வந்த பாதை குறித்து கூறிவருகின்றனர்.

அந்த வகையில் முதல் போட்டியாளரான பாடகி இசைவாணி தனது வாழ்க்கையில் நடந்த சோகமான சம்பவங்களைக் கூறிவருகிறார். அதில், தனது தந்தையின் வேலை பறிபோனதையும், அதனால் தாங்கள் பட்ட கஷ்டங்கள் குறித்தும் கண் கலங்கிய நிலையில் கூறுகிறார்.

Bigg Boss Tamil Season 5  | 5th October 2021 - Promo 1

Exit mobile version