Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

கலகலப்புடன் வெளியான பிக் பாஸ் 5 சீசனின் இரண்டாவது புரோமோ.!!

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது புரோமோ வெளியாகியுள்ளது.

பிரபல விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நேற்று பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி பிரம்மாண்டமாக ஆரம்பமானது. இந்த சீசனில் மொத்தம் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ இன்று காலை வெளியாகியிருந்தது. அதில், இந்த வார கேப்டன் பதவிக்கு போட்டியிட சின்னபொண்ணு, நமிதா, பவானி, ராஜு, நிரூப் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

இந்நிலையில், தற்போது இரண்டாவது புரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. அதில், பிக்பாஸ் போட்டியாளர்கள் ஜாலியாக ஒருவரை ஒருவர் கலாய்த்து வருகின்றனர். இந்தப் புரோமோவை பார்த்த ரசிகர்கள் இன்றைய எபிசோடை காண மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

Exit mobile version