Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

சும்மா சொல்லக்கூடாது சூப்பரா வண்டி ஓட்டுற! குதுகலத்தில் பிக்பாஸ் போட்டியாளர்கள் ஏன் தெரியுமா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் ப்ரோமோ வெளியாகி இருக்கின்றது.

பிக்பாஸ் வீட்டில் இருந்து இதுவரையில் மூன்று பேர் வெளியேறி இருக்கும் நிலையில், இந்த வாரம் எலிமினேஷன் ப்ராசஸ் இல்லை என பிக்பாஸ் அறிவித்திருக்கின்றார்.

தீபாவளி நெருங்குவதால் காரணமாக எலிமினேஷணிலிருந்து விலக்கு அளித்திருக்கின்றார். இதன் காரணமாக நேற்றைய தின போட்டியில், ஹவுஸ் மேட்ஸ் குதூகலமாக வந்தார்கள்.

இந்த நிலையில், இன்றைய நிகழ்ச்சிக்கான முதல் புரோமோவில், பாட்டி சொல்லை தட்டாதே என்ற டாஸ்க் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

இதில் ஒவ்வொரு பண்டிகைக்கும் பிள்ளைகள் வருவார்கள் என்று காத்துக் கொண்டிருந்தவர்களுக்கு எப்போதுமே ஏமாற்றம்தான்.

அதோடு சொத்துக்கான பத்திரங்களை ஒரு பெட்டியில் வைத்துவிடுவார்கள், அதனை வைத்திருப்பவர்கள் யார் தன்னை பார்த்துக் கொள்வார்களோ அவர்களுக்கே அந்த பத்திரத்தை கொடுப்பதாக பாட்டி கூற அனைவரும் பாட்டியை சந்தோஷப்படுத்தும் வேலையில் இறங்கி இருக்கிறார்கள்.

ஒரு புறம் பெட்டியிலிருந்து பத்திரத்தை எடுக்க ஒரு சிலர் முயற்சி செய்கிறார்கள். இதுதான் கதை என புதிதாக ஒரு போட்டியை கொடுத்து இருக்கிறார்கள் இதில் தேர்வு பெறுபவர் யார் என்பதை பொறுத்துதான் பிக் பாஸ் இன் சலுகை அறிவிப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Exit mobile version