விஜய்க்கு விழுந்த மிகப்பெரிய அடி!! தவெக மாநாட்டால் வந்த புதிய சிக்கல்!!

0
419
Biggest blow to Vijay!! A new problem from the conference!!

தமிழக வெற்றிக் கழக முதல் மாநில மாநாடு 27-1`0-2024 விக்கிரவாண்டியில்  நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு பிறகு தவெக தலைவர் விஜய்க்கு  நெருக்கடியான மூன்று சிக்கல்கள் வந்துள்ளது. அதாவது மாநாட்டிற்கு பங்கேற்ற விக்கிரவாண்டி “வி” சாலைக்கு வரும் போது 6 பேர்  விபத்து மற்றும் உடல் நலக்குறைவால் பலியாகி உள்ளார்கள். இவர்களுக்கு தவெக தலைவர் விஜய் இரங்கல் தெரிவிக்கவில்லை, என்பது முதல் சர்ச்சையாகி இருக்கிறது.

கட்சி சார்பாக புஸ்ஸி ஆனந்த் மட்டும் நேரில் சென்று இரங்கல் தெரிவித்தார். இந்த நிலையில் வேறு வழி இன்றி இரவோடு இரவாக விஜய் இரங்கல் தெரிவித்தார். அடுத்ததாக விஜய்யின்  அரசியல் பேச்சுக்கு பல அரசியல் தலைவர்கள் விமர்சனம் செய்தார்கள். ஆதரவு ,எதிர்ப்பு என பல கருத்துக்கள் தவெக  கொள்கை நிலைப்பாடிற்கு ஏற்றவாறு வந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமா விமர்சனம் செய்துள்ளார்.

அதாவது, “தவெக மாநாடு – ஆட்சியதிகாரத்தில் பங்கு என்பது. அதிமுகவை முந்திக் கொண்ட அவசரம் வெளிப்படுகிறது ” என்று கூறியுள்ளார். இது தவெக தொண்டர்களிடையே பெரும்  கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நடிகர் விஜய் பாசிசம் பற்றி பேசியதற்கு  எதிர்ப்புகள் எழுந்துள்ளது. திமுக -வை  நேரடியாக எதிர்த்து பேசிய விஜய், அடுத்ததாக”அவர்கள் பாசிசம் பேசுகிறார்கள் என்றால்.. நீங்கள் என்ன பேசுகிறீர்கள். நீங்கள் என்ன பாயாசமா பேசுகிறீர்கள்”  என்று குறிப்பிட்டு பேசியதற்கெல்லாம் பல எதிர்ப்பு கருத்துக்கள் எழுந்தது உள்ளது.