Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

பீகார் மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கப் போவது யார்! பரபரப்பான சூழ்நிலையில் நடந்த முக்கிய திருப்பம்!

பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு பின்பான அந்த மாநிலத்தின் கருத்துக்கணிப்புகள் ராஷ்ட்ரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சியில் அமரும் என்று ஆருடம் தெரிவித்து இருக்கிறார்கள்.

ஆனாலும் மக்களோ கருத்துக் கணிப்புக்கு மாறாக சுவையான கருத்தை தெரிவித்திருக்கிறார்கள்.

பீகார் மாநிலம் 243 சட்டமன்ற தொகுதிகளை கொண்டது அந்த மாநிலத்தின் சட்டப்பேரவைக்கு புதிய உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த மாதம் 28ம் தேதி முதல் மூன்று கட்டங்களாக நடைபெற்று வந்தது. அங்கே தேர்தல் முடிந்துவிடட நிலையில்,

செய்தி நிறுவனங்கள் சார்பாக நடத்தப்பட்ட தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்பில் ராஷ்டிரிய ஜனதா தளம் தலைமையிலான மெகா கூட்டணி தான் ஆட்சியில் அமரும் தேஜஸ்வி யாதவ் முதல்வராக அமர்வார் என்று பெரும்பாலான மக்கள் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்பு சம்பந்தமாக பீகார் மக்கள் இடையே கருத்து கேட்கப்பட்டது அதற்கு கருத்துக் கணிப்புகள் முடிவுகள் மீது அவர்களுக்கு முழு நம்பிக்கை இல்லை என்பதை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.

பாட்னாவை சார்ந்த ஒருவர் தெரிவிக்கையில், தன்னுடைய குடும்பம் பல தலைமுறைகளாக பீகாரில் வாழ்ந்து வருகின்றது இந்த தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நாங்கள் நம்புவது கிடையாது, கடந்த காலங்களில் தேர்தலுக்குப் பின்பு கருத்து கணிப்புகள் தவறாக இருக்கின்றது என்று தெரிவித்திருக்கின்றார்.

கிழக்கு சாம்பாரா பகுதியை சார்ந்த நாவல் கிஷோர் தெரிவிக்கையில், தேர்தலுக்கு பின்பான கருத்துக்கணிப்பு உண்மைகளை வெளியே எடுத்து வராது என்று நான் நம்புகின்றேன். நிதிஷ்குமார் மீண்டும் ஒரு முறை முதல்வராக வருவார் என்று நம்பிக்கை இருக்கிறது என தெரிவித்து இருக்கின்றார்.

பாட்னாவை சார்ந்த ஒரு மூத்த குடிமகன் தெரிவிக்கையில், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்புகிறேன் தேஜஸிரியாதவ் வெற்றி பெற முடியும் என்று தெரிவித்திருக்கிறார். இன்று மதியத்திற்குள் பீகாரில் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம்.

Exit mobile version