Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

நின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!!

நின்று கொண்டிருந்தவர் மீது பைக் மோதி விபத்து:! சம்பவ இடத்திலேயே உயிரிழந்த பரிதாபம்!!

தேனி மாவட்டம் கோடாங்கி பட்டியை சேர்ந்தவர் அழகுராஜா என்பவர்.இவர் சென்று கொண்டிருந்த சாலையின் ஓரமாக இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு தனது உறவினரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது அவ்வழியாக வந்த அபினேஷ் என்னும் 19 வயது இளைஞர்,நின்று கொண்டிருந்தவர் மீது மோதி விபத்தை ஏற்படுத்தினார்.இந்த விபத்தில் பலத்த காயமடைந்த அழகுராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனைக் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பழனிசெட்டிபட்டி காவல்துறையினர் இறந்த அழகு ராஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அருகிலிருக்கும் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இந்த விபத்து குறித்து வழக்கு பதிவு செய்து அந்த இளைஞரிடம் தீவிர விசாரணையை காவல்துறையினர் நடத்தி வருகின்றனர்.

Exit mobile version