Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாழப்பாடி அருகே நடந்த கோர விபத்து:? புதுமாப்பிள்ளை உட்பட இருவர் பலி?

வாழப்பாடி அருகே மூன்று இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கோர விபத்தில் புது மாப்பிள்ளை உட்பட இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.4 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இந்த விபத்து குறித்து வாழப்பாடி காவல்துறை விபத்தில் இறந்தவர்களின் தகவல்களை வெளியிட்டுள்ளனர்.

சேலம் கன்னங்குறிச்சி மூக்கனேரி பகுதியைச் சேர்ந்தவர் பழனிசாமி இவரது மகன் அருன்பாலாஜி ( 29).பழனிச்சாமி குடும்பத்தார் புதிதாக வீடு கட்டி,பையனுக்கு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.இந்நிலையில் திருமணம் நிச்சயக்கப்பட்டு திருமண நாளும் குறிக்கப்பட்டது.புதிதாக கட்டிய வீட்டிற்கு இன்னும் புதுமனை புகுவிழா நடத்தாததால் அதனை நடத்த ஏற்பாடு செய்தனர்.

இந்நிலையில் அருண்பாலாஜி புதுமனை புகுவிழாவிற்கு தனது உறவினர்களை அழைப்பதற்காக அதே பகுதியை சேர்ந்த அருண்பாலாஜியின் உறவினரான சந்திரசேகரன் என்பவரை தன்னுடன் அழைத்துக் கொண்டு சேலத்தில் இருந்து ஆத்தூர் நோக்கி சேலம் சென்னை தேசிய நெடுஞ்சாலை வழியாக இன்று காலை சென்றார்.

வாழப்பாடி அருகே இருவழிப்பாதை முத்தம்பட்டி மேம்பாலத்தில் சென்று கொண்டிருந்தபோது, மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியிலிருந்து சேலத்திலுள்ள உறவினர் வீட்டிற்குத் துக்கம் விசாரிக்க இரண்டு இருசக்கர வாகனத்தில் நவீன்குமார்(25) மற்றும்அவரின் மனைவி,நவீன் குமாரின் வண்டியை தொடர்ந்து அவரது தந்தை மற்றும் தாய் வந்து கொண்டிருந்தனர்.நவீன் குமார் அருன்பாலாஜி ஓட்டி வந்த வாகனத்தின் மீது நேருக்கு நேர் மோதி உள்ளார்.

இதனையடுத்து, அருண்குமாரை பின்தொடர்ந்த இவரது தந்தை செல்வமணிகண்டனும், திடீரென வாகனத்தைக் கட்டுப்படுத்த முடியாததால், விபத்துக்குள்ளான இருசக்கர வாகனங்கள் மீது மோதி உள்ளார். இந்த விபத்தில் பலத்த காயமடைந்த சேலத்தைச் சேர்ந்த புதுமாப்பிள்ளை அருன்பாலாஜியும், சீர்காழியைச் சேர்ந்த நவீன் குமாரின் தந்தை செல்வமணிகண்டனும் தலையில் பதத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

இந்த விபத்தில், நவீன்குமார், இவரோடு பைக்கில் உட்கார்ந்து வந்த அவரது மனைவி ஜோதி(20), நவீன் குமாரின் தந்தை பைக்கில் உட்கார்ந்து வந்த அவரது தாய் ரூமேந்திரா(50) மற்றும் அருண் பாலாஜியுடன் பைக்கில் வந்த சந்திரசேகரன் ஆகிய 4 பேரும் படுகாயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்துத் தகவலறிந்த முத்தம்பட்டி பகுதி பொதுமக்களும், காவல்துறையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று, காயம்பட்டவர்களை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் வந்து சேரும் உயிருக்கு போராடி வருகின்றனர்.இதுகுறித்து வாழப்பாடி காவல் நிலையம் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version