உடலில் வாதம்,பித்தம்,கபம் ஆகிய மூன்றும் சம நிலையில் இருக்க வேண்டியது அவசியம்.இந்த மூன்றில் எது அதிகமானாலும் உடலில் பாதிப்புகள் ஏற்பட்டுவிடும்.குறிப்பாக பித்தம் அதிகமானால் குடல் மற்றும் சம்மந்தப்பட்ட பாதிப்புகள் அதிகளவு ஏற்படும்.
பித்தம் அதிகமாவதால் ஏற்படும் பாதிப்புகள்:
*அஜீரணக் கோளாறு
*நெஞ்செரிச்சல்
*சரும எரிச்சல்
*டயேரியா
*சரும அரிப்பு
*அதிகமான தாகம்
தேவையான பொருட்கள்:
1)சீரகம்
2)கருஞ்சீரகம்
3)காட்டு சீரகம்
4)எலுமிச்சை சாறு
5)இஞ்சி
6)இந்துப்பு
ஒரு கிண்ணத்தில் 50 கிராம் சீரகம்,50 கிராம் கருஞ்சீரகம்,50 கிராம் காட்டு சீரகம் மற்றும் ஒரு துண்டு தோல் நீக்கிய இஞ்சி சேர்த்து கலந்து விடவும்.அதன் பின்னர் ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை அதில் பிழிந்து கலந்து விடவும்.
பிறகு இதை காட்டன் துணியில் பரப்பி வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.பிறகு மிக்ஸி ஜாரில் உலர்த்திய சீரகம்,கருஞ்சீரகம்,காட்டு சீரகம்,இஞ்சி மற்றும் இந்துப்பு போட்டு பவுடராக்கி கொள்ளவும்.இதை ஒரு டப்பாவில் கொட்டி சேமித்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி சூடாக்கவும்.இதை ஒரு டம்ளரில் ஊற்றி அரைத்த பவுடர் ஒரு ஸ்பூன் மிக்ஸ் செய்து குடித்து வந்தால் பித்த நோய்கள் அனைத்தும் குணமாகும்.
உடலில் பித்தம் அதிகமாக இருந்தால் வேலைகளுக்கு நடுவே சிறிது நேரம் உடலுக்கு ஓய்வு கொடுக்க வேண்டும்.தினமும் யோகாசனம் செய்வது,உடலுக்கு குளிர்ச்சி தரக் கூடிய உணவுகளை எடுத்துக் கொள்வது போன்ற செயல்கள் மூலம் உடலில் பித்தத்தை அதிகப்படுத்த முடியும்.
அதிக காரம் மற்றும் புளிப்பு சுவை நிறைந்த உணவுகள் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.உடலில் அதிக பித்தம் இருப்பவர்கள் ஆல்கஹால் எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும்.