Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

வாங்காத பொருட்களுக்கு பில்!! நியாயவிலை கடை ஊழியர்களுக்கு எச்சரிக்கை!!

நியாயவிலை கடைகளில் வாங்காத உணவு பொருட்களுக்கு பில் போட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு சங்க பதிவாளர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.இந்தியாவில் 5 லட்சத்திற்கும் அதிகமான நியாயவிலை கடைகள் உள்ளது. தமிழ்நாட்டில் மட்டும் 39 மாவட்டங்களில் 34,083 நியாயவிலை கடைகள் உள்ளது. இதில் 2.23 கோடி குடும்ப அட்டைகள் மூலம் 7 கோடி பேர் பயனடைகின்றனர்.

இந்த நியாயவிலை கடைகளின் மூலம் மக்களுக்கு உணவு பொருட்கள் இலவசமாகவும், மலிவு விலையிலும் கிடைக்கிறது. ஒரு சில நியாயவிலை கடை ஊழியர்கள் முன்பு பில் புத்தகங்களை உபயோகிக்கும் போது, பொருட்கள் இருந்தாலும், இல்லை எனக் கூறி தங்களுக்கு வழங்குதில்லை, அந்த பொருட்களை வெளியில் விற்று விடுகிறார்கள் என  பொதுமக்களிடமிருந்து  புகார்கள் வந்ததையடுத்து, தமிழக அரசு பயோ மெட்ரிக் முறையை கொண்டுவந்தது.

இதன் மூலமாக குடும்ப அட்டைதாரர்கள், யார் வாங்கினார்கள், என்ன பொருட்கள் வாங்கினார்கள் என்ற முழுமையான விவரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியவந்தது. பொதுமக்களுக்கும் வாங்கிய பொருட்களுக்கு அவர்களின் கைபேசியில்  எஸ்எம்எஸ்  வந்துவிடும். ஆனால் இதிலும் மக்கள் வாங்காத பொருட்களுக்கு எஸ்எம்எஸ் வருவதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இந்த பயோ மெட்ரிக் முறையிலும் புகார்கள் வந்த நிலையில்,  வாங்காத பொருட்களுக்கு பில் போடும் ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூட்டுறவு பதிவாளர் எச்சரித்துள்ளார்.

Exit mobile version