Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

எம்புரான் படக்குழுவினருக்கு மிரட்டல்!.. காட்சிகள் மாற்றப்படுமா?!…

empuraan

Empuraan movie: மலையாளர் நடிகர் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள திரைப்படம்தான் எம்புரான். 2019ம் வருடம் பிரித்திவிராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்து வெளியான லூசிபர் படத்தின் இரண்டாம் பாகம் போல எம்புரான் உருவாகியுள்ளது. இந்த படத்தில் மன்சு வாரியர், பிரித்திவிராஜ் மற்றும் ஹாலிவுட் நடிகர், நடிகைகளும் நடித்திருக்கிறார்கள்.

மலையாள சினிமா என்றாலே இயல்பான கதை சொல்லல் என்கிற ஃபார்முலாவை மீறி, மேக்கிங்கில் அசத்தியிருக்கிறார் பிருத்திவிராஜ். பாலிவுட், ஹாலிவுட் படங்கள் போல இப்படத்தை உருவாக்கியிருக்கிறார். இந்த படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியானது.

லூசிபர் படத்தை போலவே இந்த படத்திலும் அதிரடி சண்டை காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இந்த படத்திற்கு அதிக அளவில் முன்பதிவு இருந்தது. தமிழில் விடாமுயற்சியை விட இந்த படத்திற்கு அதிக டிக்கெட் முன்பதிவு இருந்தது. படம் வெளியாகி 2 நாட்களில் இப்படம் 100 கோடி வசூலை தாண்டியது.

இந்த படத்தில் சிறுபான்மையினர் மீது மதவாத கட்சிகள் நடத்தும் தாக்குதல், குஜராத்தில் நடந்த இனப்படுகொலைகள் தொடர்பான காட்சிகள் இடம் பெற்றிருக்கிறது. இது மதவாத கட்சிகளுக்கும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினருக்கும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கிறது. எனவே, இப்படத்திற்கு பாஜக, ஆர்.எஸ்.எஸ் மிரட்டல் விடுத்திருக்கிறார்கள். எனவே, படத்தின் சில காட்சிகளை நிக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் படக்குழு திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இதை கண்டித்துள்ள கேரள முதல்வர் பினராயி விஜயன் ‘மிகக் கொடூரமான இனப்படுகொலையை படம் வெளிக்காட்டுவதால் சங்கபரிவார்களுக்கு கோபம் வந்திருக்கிறது. கலைப் படைப்பை, கலைஞர்களை அழிக்க முயற்சிப்பது ஜனநாயக உரிமையை மீறும் செயல், ஜனநாயக சமூகத்தில் கருத்து சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்’ என சொல்லி இருக்கிறார்.

Exit mobile version