Site icon News4 Tamil | Online Tamil News | Entertainment | Sports

ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வைத்த செக்!! மீண்டும் நடைமுறைக்கு வந்த பழைய திட்டம்!!

biometric-bio-metric-method-in-schools-again

biometric-bio-metric-method-in-schools-again

கொரோனா வைரஸ் காரணமாக தமிழக பள்ளிகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள உள்ள பயோமெட்ரிக் முறை மீண்டும் நடைமுறைக்குக் வர உள்ளது என பள்ளிகல்வித்துறை  தெரிவித்துள்ளது. பயோமெட்ரிக் (BIO METRIC) என்றால் கைரேகை அடையாளங்கள் நேரடியாக தெரிவிப்பது ஆகும். பயோமெட்ரிக் முறையில் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர் மட்டுமே நிறுவனத்திற்க்குள் நுழைய முடியும்.

பள்ளிகளில் படிக்கும் ஆர்வத்தை காட்டி மாணவர்கள்  குறித்த நேரத்தில் வந்தாலும் ஆசிரியர்கள் காலதாமதமாக, அலட்சியமாக பணிக்கு வருகிறார்கள் என பெற்றோர்கள் அளித்த  புகார்கள் எழுந்த நிலையில், இதை தவிர்க்கும் விதமாக பள்ளிகல்வித்துறை  பயோமெட்ரிக்  முறையை மீண்டும் அமல்படுத்துகிறது. தமிழகத்தில் அரசுப்பள்ளி, அரசு உதவிப்பெறும் பள்ளி, நடுநிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளி, என செயல்பட்டு வருகிறது.

தமிழக அரசு கடந்த 2019-ம் ஆண்டு ஆசிரியர்கள் வருகை பதிவு செய்ய பயோமெட்ரிக் முறை அறிமுகம் செய்தது. ஆனால் 2020-ம் ஆண்டு கொரோனா வைரஸ்  வேகமாக பரவி வருவதால் பயோமெட்ரிக் முறையின் மூலம் நோய் விரைவில் பாதிக்கும் என கருதி இம்முறையை பாதுகாப்புப் காரணமாக தமிழக அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்தது.

தற்போது ஆசிரியர்கள் தாமதமாக வருவது எண்ணி, தமிழக அரசு மீண்டும் பயோமெட்ரிக் முறையை  கொண்டு வர வேண்டும் என முடிவு செய்துள்ளது. இதன் மூலம் பள்ளி மற்றும் பள்ளி சார்ந்த அலுவலகங்கள் பணிபுரியும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்கள்   பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவேடு செய்து அதன், அனைத்து விவரங்களையும் சேகரித்து  அந்த மாவட்ட கல்வி அலுவலர்கலுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அதிகாரபூர்வமாக  உத்தரவிடப்பட்டுள்ளது.

Exit mobile version